9 நாட்கள் முடிவில் நேர்கொண்ட பார்வை தமிழக மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் இரண்டு வாரம் ஆகியும் கோமாளி படம் வந்தும் நன்றாக தான் ஓடி வருகின்றது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படம் வெளிவந்து 9 நாட்கள் ஆகிய நிலையில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 62 கோடி வரை வசூல் செய்துள்ளது. இப்படம் இன்றே அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் போட்ட பணத்தை கொடுத்துவிடும் என கூறப்படுகின்றது. மேலும், இதை தொடர்ந்து வரும் வசூல் அனைத்துமே லாபம் தான், இதன் மூலம் தல அஜித் ஒரே வருடத்தில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் கேப்டன் ஆக சீட்டிங் செய்த மதுமிதா? வீடியோ போட்டு எச்ச என வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் வீட்டில் இன்று அடுத்த வாரத்திற்கான கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அதில் மதுமிதா, ஷெரின் மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் CAPTAIN என்கிற வார்த்தையில் உள்ள எழுத்துக்களை சரியாக கண்ணை மூடிக்கொண்டு எடுத்து சென்று பொருத்தவேண்டும் என கூறப்பட்டது. அப்போது மற்ற போட்டியாளர்கள் திணறிய நிலையில் மதுமிதா மட்டும் எழுத்துக்களை சரியாக பொருத்தி டாஸ்கில் ஜெயித்தார். அவர் சீட்டிங் செய்து ஏமாற்றித்தான் ஜெயித்தார் என நெட்டிசன்கள் தற்போது சமூக வலைத்தளங்களை வறுத்தெடுத்து வருகின்றனர். எழுத்துக்களை எடுத்து சென்று நேராக அவர் மட்டும் எந்த தவறும் இல்லாமல் பொருந்துகிறார். மேலும் தர்ஷன் கையில் இருந்த எழுத்தையும் பிடுங்கிக்கொண்டு செல்கிறார் அவர். வீடியோவில் நீங்களே பாருங்கள்.

பிக்பாஸ் சரவணன் வாங்கிய விருதுக்கு சின்மயி போட்ட டுவிட்- திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் புகழ் சரவணன் நிகழ்ச்சியில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் தான் உள்ளார்கள். அவர் நிகழ்ச்சியில் பெண்களை பற்றி பேசிய விஷயத்திற்கு அவரை பற்றி கோபமாக டுவிட் போட்டார் சின்மயி. இப்போது திடீரென சரவணன் விருது வாங்கியது குறித்து பெருமையாக டுவிட் போட்டுள்ளார் பாடகி. இதைப்பார்த்த ரசிகர்கள் மாற்றி மாற்றி பேசாதீர்கள், இது உங்களுக்கு அசிங்கமாக இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஐந்து நாள் முடிவில் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் நிலவரம் என்ன தெரியுமா

ஐந்து நாள் முடிவில் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் நிலவரம் என்ன தெரியுமா நடிகர் அஜித் நடித்துள “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் புதிய களம். அதில் அஜித் போன்ற பெரிய நடிகர்கள் நடிப்பது பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளது.  சென்ற வாரம் வியாழக்கிழமை வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் சென்னை பகுதியில் மட்டும் முதல் நாளில் ஒன்றரை கோடிக்கும் மேல் வசூலித்தது.அதற்கடுத்த நாட்களிலும் ஒரு கோடிக்கும் அதிகமான வசூல் தான் வந்தது. நேற்று திங்கட்கிழமை என்றாலும் “பக்ரீத்” விடுமுறை நாள் என்பதால் நேற்றும் ஒரு கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளது.  லேட்டஸ்ட் தகவல்களின் படி நேற்று சென்னையில் நேர்கொண்ட பார்வை படம் 1.15 கோடி ருபாய் வசூலித்துள்ளது. மொத்தமாக ஐந்து நாட்களில் 6.7 கோடி ருபாய் சென்னையில் இருந்து மட்டும் கிடைத்துள்ளது.  தொடர்ந்து ஐந்து…

நேர்கொண்ட பார்வையில் அஜித் சொன்ன அதே கருத்தை எந்த நடிகரெல்லாம் கூறியுள்ளனர்? இதோ சின்ன வீடியோ எடிட்

அஜித்தின் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை ரசிகர்களை தாண்டி சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஒரு பெரிய நடிகர் தனது மாஸான காட்சிகளை எல்லாம் தவிர்த்து பெண்களுக்கு அதுவும் பணக்கார பெண்களுக்கு நீதி வழங்கும்படியான படத்தில் நடித்திருப்பது அஜித்தின் பெயரை இன்னும் பல ஆண்டுகள் ஒலிக்க செய்யும். ஆனால் அஜித்தின் இந்த கருத்தை சிவாஜி, ரஜினி உள்பட சில நடிகர்கள் ஏற்கனவே தனது படங்களில் கூறியுள்ளனர். அவற்றை அஜித் ரசிகர்களே எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.

இதுவரை இல்லாதளவில் அதிரடி காட்டிய நேர்கொண்ட பார்வை! முதல் முறையாக முக்கிய இடத்தில்

நேர்கொண்ட பார்வை படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள இப்படத்திற்கு அமோக வரவேற்பு பெற்றுள்ளது. சென்னை, மதுரை, கோவை என தமிழ்நாட்டின் பல முக்கிய இடங்களில் கொண்டாட்டம் பெரியளவில் இருப்பதை காணமுடிகிறது. இந்நிலையில் திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸில் விடுமுறை இல்லாத நாட்களில் டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்ததுள்ளது இதுவே முதல் முறை. பாக்ஸ் ஆஃபிஸில் ரேஜ் காட்டியிருக்கிறதாம். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அந்நிறுவனம் கூறியுள்ளது.

அஜித் ரசிகர்களின் செயலால் அழுதுகொண்டே திரையரங்கை விட்டு வெளியேறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்

சில மாதங்களாக பெரிதாக எதிர்ப்பார்க்கப்பட்ட அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெற்றிகரமாக இன்று வெளியாகி விட்டது. ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர், முதல் நாள் முதல் ஷோ அட்டகாசங்கள் வேற லெவலில் இருக்கிறது. நான் நடித்த படத்தை முதல் நாள் பார்க்க வந்துள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை பார்த்து ஆனந்த கண்ணீருடன் திரையரங்கை விட்டு வெளியேறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்

மாஸ் கமர்ஷியல் வெற்றி கொடுத்து சென்றுவிடலாம் என்று நினைக்காமல் ஒரு இடத்திற்கு வந்துவிட்டோம் என அஜித் சமூக அக்கறையோடு படம் நடிக்கிறார். அப்படி முக்கிய பிரச்சனையை பேசும் படமாக அவர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. படம் எப்படி வந்துள்ளது பார்ப்போம். கதைக்களம் ஷ்ரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா சுதந்திரமாக தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி ஒரு நாள் நண்பர்களுடன் ரூமில் இருக்கும் போது ஒரு ஆண் நண்பர் எல்லை மீறுகிறார் ஷ்ரத்தாவிடம். அப்போது ஷ்ரத்தா அவரை பாட்டில் வைத்து அடித்துவிட்டு அங்கிருந்து வெளியே வருகின்றனர். அடிபட்டவர்கள் மிகவும் பெரிய இடத்து பிள்ளைகள். அதனால் அந்த பெண்களுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்க, அந்த நிகழ்வை அஜித் துல்லியமாக கவனித்து வருகிறார். அப்படி கவனித்து வரும் போது ஒரு நாள் அந்த வழக்கை…

சித்தப்பு சரவணன் வெளியேறவில்லை! தீயாய் பரவும் தகவல்…

பேருந்தில் பெண்களை உரசியதாக சொன்ன காரணத்திற்காக சரவணன் பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.  சரவணன் என்ன காரணத்திற்காக வெளியேற்றப்பட்டார்? சக போட்டியாளர்களிடம் பிரியாவிடை பெற கூட சரவணனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சரவணன் எங்கே போனார், என்ன ஆனார் என்ற குழப்பத்தில் இருந்தனர் பார்வையாளர்களும், பிக் பாஸ் குடும்பத்தினரும் உள்ளனர்.  இந்நிலையில் சரவணன் வெளியேறவில்லை என்ற தகவல் ஒன்று தற்போது தீயாய் பரவி வருகின்றது. சிலர் அவர் ரகசிய அறையில் இருப்பதாக கூறி வரும் நிலையில் மற்றொரு தகவல் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.  ஆம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சரவணன் வெளியேற்றப்படவில்லை என்றும் வெளியேறியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இதற்கான காரணம் கடந்த வாரம் மனைவிகள், குழந்தையை பார்க்க நினைத்த சரவணனின் ஆசையை நிறைவேற்றுவதற்கு, அவரது குடும்பத்தினரை பிரபல ரிவி சந்தித்த போது அங்கு பெரும் பிரச்சினை நடந்து…

பிக்பாஸில் லாஸ்லியாவின் 96 பட கெட்டப்- திரிஷா கொடுத்த ரியாக்ஷன்

திரிஷா நடித்த படங்களில் அண்மையில் படு ஹிட்டடிட்ட படங்களில் 96 படம். கல்லூரி கால காதலை காட்டும் இந்த படத்தில் தமிழ் மக்கள் அப்படியே மூழ்கிவிட்டார்கள் என்றே கூறலாம். படம் ஹிட்டை தாண்டி அப்படத்தில் திரிஷா அணிந்த உடை பல கடைகளில் நீங்கள் கண்டிருக்கலாம். 96 படத்தின் ஜானு வேடத்தை அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவிற்கு கொடுத்திருந்தனர். அந்த கெட்டப்பில் அவருக்கு திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற கட்டு கட்டு கீர கட்டு என்ற பாடலை போட்டு ஆட விட்டனர். இந்த எபிசோடை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று திரிஷா கமெண்ட் செய்துள்ளார்.