வடசென்னை 2 என்ன ஆனது? இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டி

தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் வரும் என அப்போதே அறிவித்தார்கள். ஆனால் அதன்பிறகு அசுரன் படத்திற்காக இணைந்து அதை விட பெரிய வெற்றியை ருசித்துள்ளனர் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி. அடுத்து வெற்றிமாறன் வெப் சீரிஸ், சூரியுடன் ஒரு படம் என தொடர்ந்து காலெண்டரை நிரப்பி வைத்துள்ளார். அதனால் வடசென்னை 2 வருமா வராதா என்கிற சந்தேகமே ரசிகர்களுக்கு வந்துவிட்டது. இந்நிலையில் இது பற்றி வெற்றிமாறன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். “வடசென்னை 2 பட்ஜெட் அதிகம், கொஞ்சம் கஷ்டம்தான், ஆனால் விரைவில் எடுக்கலாம் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அந்த செயலை செய்ய எப்போதும் நான்வெட்கப்படவே மாட்டேன் நடிகை ரகுல் பரீத் சிங் ஓப்பன் டாக்

தமிழ், தெலுங்கு தென்னிந்திய சினிமாவில் இரட்டை குதிரை சவாரி செய்து வந்த இளம் நடிகை நடிகை ரகுல் பிரீத் சிங் பாலிவுட் படங்களிலும் ஹீரோயினாக கலக்கி வருகிறார் தற்போது, நடிகர் கமல்ஹாசனின் இந்தியன்-2 மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் அளித்த பேட்டியில், ஒவ்வொரு நாளும் நமக்கானது என்ற உணர்வோடு வாழ வேண்டும். இன்றைய நாள் நமக்கு கிடைத்து இருக்கிறது. இன்று, நாம் உயிரோடு இருக்கிறோம். இன்றைய நாளை நல்லபடியாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வாழ்ந்தால் வாழ்க்கையில் பிரச்னைகள் இருக்காது என்று பேசினார். மேலும், நான் ஒரு பஞ்சாபி பெண்ணாக இருந்தாலும், டில்லியில் தான் படித்து, வளர்ந்தேன். தென்னிந்தியாவில் தான் எனது சினிமா வாழ்க்கை தொடங்கியது. ஆந்திராவில் இருக்கும்போது, தெலுங்கு…

கவின் லொஸ்லியா காதலை மிக கொச்சைப்படுத்திய பேசிய பிரபல நடிகை

சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் 3 முடிவுக்கு வந்தது. இதில் மிகவும் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டது கவின் மற்றும் லாஸ்லியா இடையேயான காதல் தான். இந்நிலையில் இது கேவலமான காதல் என பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா ஒரு பேட்டியில் விமர்சித்துள்ளார். எல்லாம் பாஸ்ட் ஃபுட் மாதிரியான காதலாக இருக்கு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.. கவின்-லாஸ்லியாவை அவர் இப்படி தாக்கி பேசியுள்ளது அவர்களது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. அவரை கடுமையாக ட்விட்டரில் திட்டி வருகின்றனர்.

சிம்புவோட மற்றொரு முகம் இதுதான்.! பிக்பாஸ் தர்ஷன் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட சீக்ரெட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் மூன்றாவது சீசன் முடிவடைந்த நிலையில் தர்ஷன்னின் காதலி சனம் ஷெட்டி நடிகர் சிம்புவை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரளாகி வருகிறது. தக்ஷனின் காதலி மற்றும் நடிகையுமான சனம் ஷெட்டி லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவை சந்தித்து அவருடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சிம்புவுடன் செல்பி புகைப்படத்தை எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் நடிகர் சிம்புவை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார். அந்தப் பதிவில் அவர் டைட்டிலாக நான் பலருடைய ரசிகையாக இருந்து உள்ளேன் ஆனால் சிம்புவுக்கு மிகவும் உண்மையான ரசிகையாக இருந்துள்ளேன் என கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் சில நாட்களில் தான் சிம்புவை பற்றி தெரியும். ஆனால் அந்த சில நாட்களிலேயே அவரை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது என்று அந்த…

லொஸ்லியாவுடன் திருமணம் எப்போ ? கவின் என்ன கூறியுள்ளார் தெரியுமா இவரா இப்படி

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் கொண்டாட்டம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் மேடையில் பேசும்போது கவின் இடம் லொஸ்லியாவின் காதல் பற்றி என்ன முடிவெடுத்து இருக்கீங்க? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். உடனே அனைவரும் எதிர்பார்க்காத பதிலை கவின் கூறியுள்ளார். எனக்கு சில கடமைகள் உள்ளது. அதனால் எனக்கு மற்றதை பற்றி எல்லாம் நினைக்க நேரமில்லை என்று கூறிய பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார். இதேவேளை, லொஸ்லியாவை விட ரசிகர்கள் தான் இவர்கள் இருவரும் சேர வேண்டும் என அதிகம் ஆசைப்பட்டார்கள். ஆனால், திடீரென்று கவின் பதிலை கேட்டு ரசிகர்கள் மனம் உடைந்து போயுள்ளார்கள். மேலும், லொஸ்லியா இது குறித்து இதுவரை மௌனம் காத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பிக் பாஸ் கொண்டாட்டம் திபாவளியன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிரட்டலான தீனா 2 கதை ரெடி! இன்பதிர்ச்சி கொடுத்த AR முருகதாஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் குமார். இவர் தமிழ் சினிமாவிற்கு நிறைய அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இன்று நல்ல நிலைமைக்கு வருவதற்கு காரணமாக இருந்தார். அவ்வாறு புதுமுக இயக்குனராக அந்த இருந்த ஏ ஆர் முருகதாஸ் அவர்களுக்கு தீனா படத்தின் மூலம் ஒரு வாய்ப்பினை வழங்கினார். அந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் ஏ ஆர் முருகதாஸ் அற்புதமான தீனா என்ற படத்தை கொடுத்தார். இதன் மூலம் ரசிகர்களிடையே அஜித்தின் செல்வாக்கு அதிகரித்ததோடு அனைவரும் அஜித்தை தல என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு உருவானார். அதற்கு முக்கிய காரணம் ஏ ஆர் முருகதாஸ், அதேபோல் ஏ ஆர் முருகதாஸ் பின்னர் ரமணா, கத்தி, துப்பாக்கி, கஜினி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தென்னிந்தியாவின் முக்கிய டைரக்டர்கள் ஒருவராக இருந்து வருகிறார்.…

வெளிவந்தது பிகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படக்குழுவினர் அதிர்ச்சி

இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பிகில். இப்படத்தின் மீது பிரம்மாண்டமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே வெளிவந்த பஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் பல சாதனைகளை படைத்தது. இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான டிரைலரும் இந்திய அளவில் சாதனை படைத்து உள்ளது. இதனால் ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பு மேலும் இயக்க ஆரம்பித்துள்ளது. இதை தொடர்ந்து இந்தப் படம் எப்படி இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகமாகி இருக்கிறது. இப்படத்தின் எடிட்டர் ரூபன் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார். அப்பொழுது இப்படத்தின் கிளைமேக்ஸ் குறித்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, பிகில் கிளைமாக்ஸ் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். கால்பந்து போட்டி பைனல் மேட்ச் தான் கிளைமாக்ஸ் என்று கூறியிருக்கிறார். எப்போதும் மேட்ச் விளையாடுபவர்களை விட வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான்…

லொஸ்லியா மீது உள்ள பாசம் அனைத்தும் பொய்யா சேரன் கூறிய உண்மை இது தான்

பிக்பாஸ் 3வது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த இயக்குனர் சேரனின் ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய இயக்குனர் சேரன் பிக்பாஸில் அப்பா ஸ்தானத்தில் இருந்தது பற்றி பேசினார். “அப்பா என்கிற தருணம் ரொம்ப அழகானது. எனக்கு அடிக்கடி ஆண்டவன் ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கான். பிக்பாஸ் போன போது அப்பாவாக வாழவேண்டும் என வாய்ப்பு ஏற்பட்டது. அதையும் உண்மையோடு நேர்மையோடு என் மகளை பார்ப்பது போல் நான் பார்த்துக்கொண்டேன். அதில் எந்த பாசாங்கு, போலி, கேம்காக விளையாடவில்லை. அந்த பாசத்தை பொய்யாக காட்டினால் நான் இந்த உலகத்தில் வாழவே அருகதை இல்லாதவன். அதை நான் உண்மையாகத்தா காமிக்க முடிந்தது” என கூறியுள்ளார் அவர்.

நடிகை யாஷிகா திருமணம் செய்து கொள்ள போகும் நடிகர் இவர் தான்-குஷியில் ரசிகர்கள்

நடிகை யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படத்திற்கு முன்னால் இவர் நடிப்பில் வெளியான துருவங்கள் பதினாறு மற்றும் கவலை வேண்டாம் போன்ற திரைப்படங்கள் நன்றாக ஓடாவிட்டாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இவருக்கு ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகை யாஷிகா தற்போது ஜாம்பி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்து இந்த திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகை யாஷிகாவிடம் திருமணம் குறித்து ஒரு கேள்வியானது பேட்டி ஒன்றில் எழுப்ப பட்டது.அதற்கு பதில் அளித்த நடிகை யாஷிகா எனக்கு தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை பிடிக்கும் எனவும் அவர் போல…

சென்சேஷன் ரம்யா பாண்டியனின் ஆசை! தல அஜித் பற்றித்தான்

சமீபத்தில் சேலையில் மிக கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் அதிகம் சென்சேஷன் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன். அவரை பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவிதைகள், மீம்கள் உலா வருகிறது. அந்த அளவுக்கு ஒரே போட்டோவில் இளைஞர்களை கவர்ந்திழுத்துவிட்டார். இந்நிலையில் ரம்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசியுள்ளார். “அஜித் சாரை பற்றி பலரும் பல்வேறு நல்ல விஷயங்கள் கூறுகிறார்கள். அவருடன் பேசணும், பழகணும், சேர்ந்து பணியாற்றவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது” என கூறியுள்ளார்.