எஸ் ஜே சூர்யாவின் இசை திரைப்படத்தில் நடித்த நடிகையா இது.! இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

எஸ் ஜே சூர்யா இயக்கி இசையமைத்து நடித்த திரைப்படம் இசை, இந்த திரைப்படத்தில் சாவித்திரி என்ற வடக்கத்திய நடிகை நடித்து இருந்தார். இவர் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததை காட்டிலும் தமிழ் திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களை சுண்டி இழுத்தார். தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர் அதனால் நடிப்பதற்கு தீவிரமாக கதை கேட்கும் பணியில் இறங்கினார், அதேபோல் இசை திரைப் படத்திற்கு ஏற்றவாறு கதைக்கு என்ன தேவையோ அதே போல் நடிக்க தயாராக இருந்தார். இவரின் உண்மையான பெயர் சுலக்னா, சினிமாவில் நடிப்பதற்காக சாவித்திரி என பெயர் மாற்றிக்கொண்டார். அந்த வகையில் சாவித்ரியின் பெயரை இந்த கவர்ச்சி நடிகைக்கு வைத்து அவரது பெயரை கெடுத்து விட்டனர் என்று கோடம்பாக்கத்தில் இசை சாவித்ரிக்கு எதிராக…

கைதி, பிகில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் எத்தனை கோடி வசூல் தெரியுமா.? இதோ முழு விவரம்.!

2019 தீபாவளி விருந்தாக வெளியாகிய திரைப்படம் கைதி மற்றும் பிகில், கைதி திரைப்படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார் அதேபோல் பிகில் திரைப்படத்தை மெர்சல் திரைப்படத்தை இயக்கிய அட்லி தான் இயக்கியிருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இதில் கைதி  திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் பிகில் திரைப்படம் 13 கோடி இதுநாள் வரை வசூல் செய்துள்ளது அதேபோல் கைதி திரைப்படம் இதுவரை சென்னையில் 4.9 கோடி வரை வசூல் செய்துள்ளது, கடந்த சில தினங்களில் மட்டும் பிகிலுக்கு இணையாக சென்னையில் கைதி திரைப்படம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

நம்ம வீட்டு பிள்ளை உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மனுவேல் நடித்திருந்தார், அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இந்த திரைப்படம் குடும்பத் திரைப்படமாக வெளியானதால் குடும்பங்களுடன் கூட்டம் கூட்டமாக படத்தை திரையரங்கில் பார்த்தார்கள். அதுமட்டுமில்லாமல் ரசிகரிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படத்தின் வசூல் விவரம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் நம்ம வீட்டு பிள்ளை 60 கோடி வரை வசூல் செய்துள்ளது, அதேபோல் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 75 கோடி வரை வசூல் செய்துள்ளது. தொடர் தோல்வியால் துவண்டு கிடந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப்படம் நல்ல உற்சாகத்தை கொடுத்துள்ளது.

வடசென்னை 2 என்ன ஆனது? இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டி

தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் வரும் என அப்போதே அறிவித்தார்கள். ஆனால் அதன்பிறகு அசுரன் படத்திற்காக இணைந்து அதை விட பெரிய வெற்றியை ருசித்துள்ளனர் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி. அடுத்து வெற்றிமாறன் வெப் சீரிஸ், சூரியுடன் ஒரு படம் என தொடர்ந்து காலெண்டரை நிரப்பி வைத்துள்ளார். அதனால் வடசென்னை 2 வருமா வராதா என்கிற சந்தேகமே ரசிகர்களுக்கு வந்துவிட்டது. இந்நிலையில் இது பற்றி வெற்றிமாறன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். “வடசென்னை 2 பட்ஜெட் அதிகம், கொஞ்சம் கஷ்டம்தான், ஆனால் விரைவில் எடுக்கலாம் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ரஜினி சிவா கூட்டணியில் புதிய படம் பெயர் வியூகம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘தர்பார்’. நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீப் பாப்பர், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத் துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், அடுத்ததாக விஸ்வாசம் படத்திற்கு பிறகு இயக்குனர் சிவா சூப்பர்ஸ்டார் ரஜினியைஇயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 168 என படத்திற்கு தாற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என உறுதியான தகவல் இதுவரை வராத நிலையில் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு அஜித் நடிப்பில் தான் இயக்கிய வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என வி செண்டிமென்ட்டை…

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சியில் போலீசார்

நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்த மிரட்டல் வெடிகுண்டு குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த போலீசார் உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் வீட்டுக்கும் சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கும் பாதுகாப்பு பாதுகாப்பு அளித்தனர். மேலும் இரண்டு வீடுகளையும் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி…

வசூலில் ருத்ரதாண்டவம் ஆடிய கைதி இதோ மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் விவரம்.!

மாநகரம் திரைப்படத்தை இயக்கி ரசிகர்களின் மனதில் குடி புகுந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இவர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகிய திரைப்படம் கைதி, இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்த திரைப்படத்தின் வசூல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன முதல் நாள் வசூலை விட அடுத்த நாள் வசூல் அதிகமாகியது, மேலும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்த நிலையில் மூன்று நாள் முடிவில் இந்த திரைப்படம் 10 கோடிக்கும் மேல் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது, மேலும் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் கண்டிப்பாக 30 கோடி வரை வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் கிங் இவர்கள் தான்! லிஸ்ட் இதோ – எத்தனை படங்கள் தெரியுமா

தமிழ் சினிமாவுக்கு உலகளவில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் படங்களுக்கு எப்போதும் உலகளவில் பெரும் வரவேற்பு இருக்கும். இதில் ரஜினிகாந்த் மற்றும் விஜய்க்கு சற்று கூடுதலான முக்கியத்துவம் உண்டு. இவர்களின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் பெரும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. அந்த வகையில் உலகளவில் 2 நாட்களில் ரூ 100 கோடி, 3 நாட்களில் ரூ 100 கோடி வசூல் கலெக்‌ஷன் செய்த இவர்களின் படங்களை பார்க்கலாம். 2 நாட்களில் ரூ 100 கோடி வசூல்:- கபாலி (2016) சர்கார் (2018) 2.0 (2018) பிகில் (2019) 3 நாட்களில் ரூ 100 கோடி வசூல்:- மெர்சல் (2017) காலா (2018)

லோகேஷ் கனகராஜ் அதிரடி ட்வீட்.! கைதி 2 கன்ஃபார்ம்.! தளபதி 64 தள்ளி போகுமா.?

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ், இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்,. இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில், ஹீரோயின் இல்லை, பாடல் இல்லை, இருந்தாலும் தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் இறுதியில் இரண்டாம் பாகம் வெளியாகும் என டீஸ்ட் கொடுத்திருந்தார்கள். தற்பொழுது லோகேஷ் கனகராஜ் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார், அந்த ட்விட்டரில், கைதி 2 படத்திற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு  நன்றி என்று தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுக்கு நன்றி தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ், கைதி 2 உருவானால் தளபதி 64 திரைப்படம் தள்ளிப் போகுமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தளபதி 64…

தல 60 ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்: எப்போது வெளியாகிறது தெரியுமா? குஷியில் ரசிகர்கள்

தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் இயக்கத்தில் தன்னுடைய 60வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டு படத்தின் டைட்டில் வலிமை என்பதையும் படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். இந்த படத்தில் தல அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதால் நாளுக்கு நாள் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரையும் வெளியிட இருக்கிறார்களாம் படக் குழு. குறிப்பாக வலிமை படத்தின் பூஜை நடப்பதற்கு முன்பே வலிமை படத்தின் கேஸ்ட் & க்ரூ வேலைகளை முடித்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் தல அஜித்தை வைத்து புது கெட்டப்பில் போட்டோஷூட்டும் நடத்தி உள்ளனர். வரும் டிசம்பர்…