வாட்ஸ் ஆப்புக்கு மாற்றாக களமிறங்கியுள்ள சிக்னல் செயலி, யூசர்களுக்கு ஸ்கிரீன் செக்யூரிட்டி பாதுகாப்பையும் வழங்குகிறது. பிரைவசி பாலிசி அப்டேட் காரணமாக வாட்ஸ் ஆப் கடும் சர்ச்சைக்குள்ளானது. உலகளவில் கடும் எதிர்ப்பை பதிவு செய்த யூசர்கள், அந்த செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். பிரைவசி பாலிசி தொடர்பாக வாட்ஸ் ஆப் வெளியிட்ட விளக்கத்தையும் யூசர்கள் நம்பவில்லை. இதனால், நாளுக்குநாள் சிக்னல் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிக்னல் செயலியும் யூசர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுத்துள்ளது. யூசர்களின் செல்போன் எண்களை தவிர வேறு எந்த தகவலையும் சிக்னல் செயலி கேட்பதில்லை. வாட்ஸ் ஆப்- ன் பிரைவசி பாலிசியுடன் ஒப்பிடும்போதும், சிக்னல் செயலியின் பிரைவசி பாலிசி தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாக யூசர்கள் கூறி வருகின்றனர். ரஷ்யாவில் தஞ்சமடைந்திருக்கும் எட்வர் ஸ்டோடன்…
Author: admin2
விரைவில் வருகிறது Google Fit App! இதயத்துடிப்பு, சுவாசத்தை இனி நீங்களே அறிந்துகொள்ளலாம்
டெக் ஜாம்பவானான கூகுள் நிறுவனம், மக்களின் தேவைக்கு ஏற்ப புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு பிறகு மக்களிடையே ஹெல்த்கேர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், அவை சார்ந்த தொழில்நுட்பங்களை தேடி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சுவாசம், இதய துடிப்பு மற்றும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு, ரத்தத்தின் நிறம் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்வது தொடர்பான பிட்னஸ் கருவிகளை தனித்தனியாக உபயோக்கிக்கின்றனர். இதனையறிந்து கொண்ட கூகுள் நிறுவனம், செல்போன்கள் மூலம் சுவாசத்தின் அளவு மற்றும் இதயத்துடிப்புகளை அறிந்துகொள்ளும் வசதியை கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கூகுள் பிட் செயலியை (Google Fit App) உருவாக்கியுள்ளது. இந்த செயலி தற்போது பிளேஸ்டோரில் இல்லை. அடுத்த மாதத்துக்குள் அனைத்து ஆன்ட்ராய்டு யூசர்களும் பயன்படுத்துமாறு, அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. Google Fit App-ஐ பயன்படுத்தும் முறை கூகுள் பிட் ஆப் மூலம்…
அலெக்சாவுக்கு தினமும் ஐ லவ் யு சொல்லும் இந்தியர்கள் – அதற்கு இப்படியா?
இந்திய சந்தையில் அமேசான் அலெக்சா சேவை மூன்றாவது ஆண்டை கடந்துள்ளது. இதையொட்டி அந்நிறுவனம் தனது விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளது.அதன்படி இந்தியாவில் 2020 ஆண்டு அலெக்சா பயன்பாடு 67 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மேலும் 2020 ஆண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 19 ஆயிரம் முறை அலெக்சாவுக்கு இந்தியர்கள் I Love You என கூறி இருக்கின்றனர். இது 2019 ஆண்டுடன் ஒப்பிடும் போது 1200 சதவீதம் அதிகம் என அமேசான் தெரிவித்து உள்ளது. இந்தியா முழுக்க அலெக்சா சேவையை பயன்படுத்துவோரில் 50 சதவீதம் பேர் மெட்ரோ அல்லாத நகரங்களில் எக்கோ சாதனங்களை வாங்கி உள்ளனர். வீட்டில் உள்ள எக்கோ சாதனம் அல்லது 100-க்கும் அதிக அலெக்சா பில்ட்-இன் சாதனங்கள் அல்லது ஸ்மார்ட்போன் என பல விதங்களில் நாடு முழுக்க அலெக்சா பயனர்கள்…
ஜனவரியில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப் எது தெரியுமா?
சர்வதேச அளவில் 2021, ஜனவரி மாதத்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலியாக டெலிகிராம் இருக்கிறது. இந்த செயலி வாட்ஸ்அப்பை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து உள்ளது. இதுபற்றிய விவரங்கள் சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இடம்பெற்று உள்ளன.இதில் அதிக டவுன்லோட்களை பெற்ற நாடாக இந்தியா இருக்கிறது. தற்சமயம் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் வாட்ஸ்அப் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த டவுன்லோட்களில் டெலிகிராம் மட்டும் 24 சதவீதம் ஆகும். ஜனவரி மாதத்தில் மட்டும் டெலிகிராம் செயலி சுமார் 6.3 கோடிக்கும் அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக டெலிகிராம் செயலியை அதிகம் டவுன்லோட் செய்தவர்கள் பட்டியலில் இந்தோனேசியா இருக்கிறது. ஒட்டுமொத்த டவுன்லோட்களில் 10 சதவீதம் இந்தோனேசியாவில் இருந்து மட்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்…
இணையத்தில் வெளியான குறைந்த விலை மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்
மோட்டோரோலா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இபிசா (Ibiza) எனும் பெயரில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தன. தற்சமயம் இதன் ரென்டர்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போதைய ரென்டர்களில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. மேலும் மோட்டோரோலா இபிசா ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இது 5ஜி வசதி கொண்ட குறைந்த விலை மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 21,999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் மோட்டோரோலா இபிசா…
மாணவர்கள் தயாரித்த 100 செயற்கைக்கோள்கள்: கலாம் நினைவாக புதிய சாதனை
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய செயற்கைக் கோள்கள் உலக சாதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ராமேஸ்வரத்தில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ்ஜோன் இந்தியா மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து மாணவர்களுக்கு செயற்கைக் கோள்களை உருவாக்கும் பயிற்சியை கடந்த 6 மாதங்களாக அளித்து வந்தன. இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள 100 பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்கள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் ஈடுபாடுடைய சுமார் 1,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு இணைய வழியிலும், நேரடியாகவும் மிகச் சிறிய பெம்டோ செயற்கைக் கோள்களின் (FEMTO SATELLITE) வடிவமைப்பு மற்றும் அதன் மேம்பாட்டுக்கான…
வரவேற்பு இல்லாததால் ஐபோன் மாடல் உற்பத்தி நிறுத்தம்?
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மினி மாடல்களின் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மினி ஐபோன் மாடல் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபோன் 12 சீரிசில் ஐபோன் 12 மினி தவிர மற்ற மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைப்பதாக கூறப்படுகிறது. விற்பனையில் ஐபோன் 12 மினி எதிர்பார்க்கப்பட்ட இலக்கை எட்டவில்லை என ஆய்வு நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஜெபி மோர்கன் வினியோக பிரிவு ஆய்வளரான வில்லியம் யாங் ஐபோன் 12 மினி உற்பத்தி 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் நிறுத்தப்படலாம் என தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், இந்த மாடல் விற்பனை சில காலம் வரை நடைபெறும் என கூறப்படுகிறது.முதற்கட்டமாக…
ஆப்பிள் வாட்ச் இதையும் செய்யுமா? ஆய்வில் வெளியான புது தகவல்
அமெரிக்காவில் உள்ள மவுண்ட் சினய் மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கொரோனாவைரஸ் அறிகுறிகளை ஆப்பிள் வாட்ச் தற்போதைய வழிமுறைகளை விட வேகமாக கண்டறிய முடியும் என தெரியவந்துள்ளது. ஆப்பிள் வாட்ச் அணிந்திருப்பவரின் இதய துடிப்பு வேறுபாடு விவரங்களை கொண்டு கொரோனாவைரஸ் அறிகுறி ஏற்படுமா என்பதை கண்டறிய முடிந்தது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவைரஸ் காலக்கட்டத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் முன் கண்டறியும் வழிமுறை பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. ஆய்வில் மவுண்ட் சினய் மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களில் பல நூறு பேர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்தனர். ஆய்வின் போது தினமும் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதற்கென உருவாக்கப்பட்ட செயலி கொண்டு பதில் அளித்து வந்தனர். இந்த ஆய்வு 2020 ஏப்ரல் மாதம் துவங்கி 2020 செப்டம்பர் வரை நடைபெற்றது. இவைதவிர,…
காதலர் தினத்தை ஒட்டி வாட்ஸ்அப்பில் வலம் வரும் அசத்தல் தகவல்
வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் தகவல் ஒன்று அதன் பயனர்கள் தாஜ் விடுதியில் ஏழு நாட்கள் இலவசமாக தங்குவதற்கான பரிசு கூப்பனை வென்று இருப்பதாக கூறுகிறது. ஒருவழியாக தாஜ் ஓட்டலில் ஏழு நாட்களுக்கு இலவசமாக தங்குவதற்கான பரிசு கூப்பனை பெற்று இருக்கிறேன் என கூறும் தகவல் மற்றும் இணைய முகவரி வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது. இணைய முகவரியை க்ளிக் செய்ததும், `காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் தாஜ் ஓட்டல் சார்பில் 200 பரிசு கூப்பன்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதனை பயன்படுத்தி ஏழு நாட்கள் எந்த தாஜ் ஓட்டலிலும் இலவசமாக தங்க முடியும். இதற்கு சரியான பரிசு பெட்டியை திறக்க வேண்டும்.’ எனும் கூறும் தகவல் அடங்கிய வலைப்பக்கம் திறக்கிறது.பின் பரிசு கூப்பனை க்ளிக் செய்த பின், பயனர்கள் பரிசை பெற குறுந்தகவலை ஐந்து க்ரூப் அல்லது 20…
அதிக பயனர்களை கவர புது அம்சங்களை வழங்கும் சிக்னல்
சிக்னல் நிறுவனம் தனது குறுந்தகவல் செயலியில் தொடர்ந்து புது அம்சங்களை வழங்கி வருகிறது. புதிய பிரைவசி பாலிசி விவகாரம் காரணமாக சிக்னல் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சிக்னல் இவ்வாறு செய்கிறது.புதிய அம்சங்கள் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சாட் வால்பேப்பர், அனிமேடெட் ஸ்டிக்கர், ப்ரோபைல் பகுதியில் அபவுட் எனும் உட்பிரிவு உள்ளிட்டவை சிக்னல் செயலியில் புதிதாக இணைக்கப்பட்டு இருக்கின்றன. முதற்கட்டமாக சிக்னல் பீட்டா பதிப்பில் 24 அனிமேடெட் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஐபோன் பயனர்களுக்கு அழைப்பின் போது குறைந்த டேட்டா பயன்படுத்த கோரும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. சிக்னல் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் இதேபோன்று பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி வாட்ஸ்அப் சாட் ஹிஸ்ட்ரியை ஐஒஎஸ் தளத்தில் இம்போர்ட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.…