விரைவில் வருகிறது Google Fit App! இதயத்துடிப்பு, சுவாசத்தை இனி நீங்களே அறிந்துகொள்ளலாம்

டெக் ஜாம்பவானான கூகுள் நிறுவனம், மக்களின் தேவைக்கு ஏற்ப புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு பிறகு மக்களிடையே ஹெல்த்கேர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், அவை சார்ந்த தொழில்நுட்பங்களை தேடி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சுவாசம், இதய துடிப்பு மற்றும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு, ரத்தத்தின் நிறம் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்வது தொடர்பான பிட்னஸ் கருவிகளை தனித்தனியாக உபயோக்கிக்கின்றனர். இதனையறிந்து கொண்ட கூகுள் நிறுவனம், செல்போன்கள் மூலம் சுவாசத்தின் அளவு மற்றும் இதயத்துடிப்புகளை அறிந்துகொள்ளும் வசதியை கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கூகுள் பிட் செயலியை (Google Fit App) உருவாக்கியுள்ளது. இந்த செயலி தற்போது பிளேஸ்டோரில் இல்லை. அடுத்த மாதத்துக்குள் அனைத்து ஆன்ட்ராய்டு யூசர்களும் பயன்படுத்துமாறு, அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. Google Fit App-ஐ பயன்படுத்தும் முறை கூகுள் பிட் ஆப் மூலம்…