மாணவர்கள் தயாரித்த 100 செயற்கைக்கோள்கள்: கலாம் நினைவாக புதிய சாதனை

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய செயற்கைக் கோள்கள் உலக சாதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ராமேஸ்வரத்தில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ்ஜோன் இந்தியா மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து மாணவர்களுக்கு செயற்கைக் கோள்களை உருவாக்கும் பயிற்சியை கடந்த 6 மாதங்களாக அளித்து வந்தன. இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள 100 பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்கள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் ஈடுபாடுடைய சுமார் 1,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு இணைய வழியிலும், நேரடியாகவும் மிகச் சிறிய பெம்டோ செயற்கைக் கோள்களின் (FEMTO SATELLITE) வடிவமைப்பு மற்றும் அதன் மேம்பாட்டுக்கான…

வரவேற்பு இல்லாததால் ஐபோன் மாடல் உற்பத்தி நிறுத்தம்?

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மினி மாடல்களின் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மினி ஐபோன் மாடல் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபோன் 12 சீரிசில் ஐபோன் 12 மினி தவிர மற்ற மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைப்பதாக கூறப்படுகிறது. விற்பனையில் ஐபோன் 12 மினி எதிர்பார்க்கப்பட்ட இலக்கை எட்டவில்லை என ஆய்வு நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஜெபி மோர்கன் வினியோக பிரிவு ஆய்வளரான வில்லியம் யாங் ஐபோன் 12 மினி உற்பத்தி 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் நிறுத்தப்படலாம் என தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், இந்த மாடல் விற்பனை சில காலம் வரை நடைபெறும் என கூறப்படுகிறது.முதற்கட்டமாக…

ஆப்பிள் வாட்ச் இதையும் செய்யுமா? ஆய்வில் வெளியான புது தகவல்

அமெரிக்காவில் உள்ள மவுண்ட் சினய் மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கொரோனாவைரஸ் அறிகுறிகளை ஆப்பிள் வாட்ச் தற்போதைய வழிமுறைகளை விட வேகமாக கண்டறிய முடியும் என தெரியவந்துள்ளது. ஆப்பிள் வாட்ச் அணிந்திருப்பவரின் இதய துடிப்பு வேறுபாடு விவரங்களை கொண்டு கொரோனாவைரஸ் அறிகுறி ஏற்படுமா என்பதை கண்டறிய முடிந்தது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவைரஸ் காலக்கட்டத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் முன் கண்டறியும் வழிமுறை பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. ஆய்வில் மவுண்ட் சினய் மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களில் பல நூறு பேர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்தனர். ஆய்வின் போது தினமும் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதற்கென உருவாக்கப்பட்ட செயலி கொண்டு பதில் அளித்து வந்தனர். இந்த ஆய்வு 2020 ஏப்ரல் மாதம் துவங்கி 2020 செப்டம்பர் வரை நடைபெற்றது. இவைதவிர,…