இணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இருட்டு அறையில் முரட்டு குத்து 2. 18 வயது நிரம்பியோரை அடிப்படையாக வைத்து அடல்ட் காமெடி படமாக முதல் படம் எடுக்கப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது. இரட்டை அர்த்த வசனங்களும் ஆபாசமான காட்சிகளும் படத்தை சர்ச்சையில் சிக்கவைத்துள்ளன. இயக்குனர் சந்தோஷ் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க, அவருடன் காமெடியனாக பிக்பாஸ் டேனி நடித்துள்ளார். ஏற்கனவே இயக்குனர் சிலர் விமர்சித்து வரும் நிலையில் இப்போது இந்த டீசரை கொண்டு மீண்டும் அச்சர்ச்சை எழுந்துள்ளது.