தனது குழந்தையுடன் அழகிய போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஆல்யா மானசா- கியூட் புகைப்படங்கள்

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமாகி அந்த சீரியல் மூலமே தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்தவர் நடிகை ஆல்யா மானசா. சஞ்சீவை காதலித்த ஆல்யா தனது பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார். அண்மையில் கர்ப்பமாக இருந்த ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு ஐலா என பெயர் வைத்துள்ளனர். ஆல்யா இப்போது ராஜா ராணி 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது படப்பிடிப்பின் இடைவேளையில் ஆல்யா குழந்தையுடன் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அவரும், அவரது குழந்தையும் ஒரே நிற ஆடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர், அந்த புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 4 வீட்டிற்குள் சென்ற 16 போட்டியாளர்கள் இவர்கள் தான் – உறுதியான லிஸ்ட்

சின்னத்திரை ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருந்த ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இன்று மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த முறை பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை ஒளிபரப்பு ஆகவுள்ள பிக்பாஸ் சீசன் 4 வீட்டின் உள்ளே சென்றுள்ள போட்டியாளர்கள் இவர்கள் தான் என்று உறுதியான லிஸ்ட் கிடைத்துள்ளது. இறுதி லிஸ்ட் : 1. அனிதா சம்பத் 2. ரியோ ராஜ் 3. கேபிரியலா 4. ரம்யா பாண்டியன் 5. நடிகர் ஆரி 6. kpy அறந்தாங்கி நிஷா 7. சனம் ஷெட்டி 8. ஆஜித் { பாடகர் } 9. வேல்முருகன் 10. ஜித்தன் ரமேஷ் 11. ஷிவானி 12. சோமசேகர் 13. நடிகை ரேகா…