எஸ் ஜே சூர்யாவின் இசை திரைப்படத்தில் நடித்த நடிகையா இது.! இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

எஸ் ஜே சூர்யா இயக்கி இசையமைத்து நடித்த திரைப்படம் இசை, இந்த திரைப்படத்தில் சாவித்திரி என்ற வடக்கத்திய நடிகை நடித்து இருந்தார். இவர் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததை காட்டிலும் தமிழ் திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களை சுண்டி இழுத்தார். தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர் அதனால் நடிப்பதற்கு தீவிரமாக கதை கேட்கும் பணியில் இறங்கினார், அதேபோல் இசை திரைப் படத்திற்கு ஏற்றவாறு கதைக்கு என்ன தேவையோ அதே போல் நடிக்க தயாராக இருந்தார். இவரின் உண்மையான பெயர் சுலக்னா, சினிமாவில் நடிப்பதற்காக சாவித்திரி என பெயர் மாற்றிக்கொண்டார். அந்த வகையில் சாவித்ரியின் பெயரை இந்த கவர்ச்சி நடிகைக்கு வைத்து அவரது பெயரை கெடுத்து விட்டனர் என்று கோடம்பாக்கத்தில் இசை சாவித்ரிக்கு எதிராக…

இந்த கவர்ச்சிப் புயலை கடந்து செல்லுங்கள்.! கேத்ரின் தெரசா வெளியிட்ட ஹாட் புகைப்படம்.!

நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், இவர் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார். இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம் காரணம் கவர்ச்சி கண்டிஷன் போடுவதில்லை, தாராளம் காட்டி நடித்து வருகிறார், தற்போது படவாய்ப்புகள் குறைந்துள்ளதாள் சமூகவலைதளத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், மின்னலை தாண்டி மேலே செல்லுங்கள் அப்போது தான் சூரிய ஒளியை காண முடியும் என்று கூறி…

கைதி, பிகில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் எத்தனை கோடி வசூல் தெரியுமா.? இதோ முழு விவரம்.!

2019 தீபாவளி விருந்தாக வெளியாகிய திரைப்படம் கைதி மற்றும் பிகில், கைதி திரைப்படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார் அதேபோல் பிகில் திரைப்படத்தை மெர்சல் திரைப்படத்தை இயக்கிய அட்லி தான் இயக்கியிருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இதில் கைதி  திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் பிகில் திரைப்படம் 13 கோடி இதுநாள் வரை வசூல் செய்துள்ளது அதேபோல் கைதி திரைப்படம் இதுவரை சென்னையில் 4.9 கோடி வரை வசூல் செய்துள்ளது, கடந்த சில தினங்களில் மட்டும் பிகிலுக்கு இணையாக சென்னையில் கைதி திரைப்படம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய பசங்களா.?! முதல் முறையாக வெளியாகிய சிம்ரனின் குடும்ப புகைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன் இவர் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், இவர் சமீபத்தில் கூட பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். தற்பொழுது இவர் மாதவனுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார், அந்த காலகட்டத்தில் இவரை இடுப்பழகி என அழைப்பார்கள் இவரின் ஆட்டத்திற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது என பல நடிகர்கள் கூறியுள்ளார்கள். இந்தநிலையில் சிம்ரன் தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

நம்ம வீட்டு பிள்ளை உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மனுவேல் நடித்திருந்தார், அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இந்த திரைப்படம் குடும்பத் திரைப்படமாக வெளியானதால் குடும்பங்களுடன் கூட்டம் கூட்டமாக படத்தை திரையரங்கில் பார்த்தார்கள். அதுமட்டுமில்லாமல் ரசிகரிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படத்தின் வசூல் விவரம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் நம்ம வீட்டு பிள்ளை 60 கோடி வரை வசூல் செய்துள்ளது, அதேபோல் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 75 கோடி வரை வசூல் செய்துள்ளது. தொடர் தோல்வியால் துவண்டு கிடந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப்படம் நல்ல உற்சாகத்தை கொடுத்துள்ளது.

வாவ் செம்ம அழகு சான்ஸே இல்லை.! லைக் அள்ளி குவிக்குது அதுல்யா ரவி வெளியிட்ட புகைப்படம்.!

நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் காதல்கண்கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர், இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இவர் நல்ல கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைபடத்தைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் இந்த நிலையில் சமீபத்தில் குழந்தைகள் தினத்தை கொண்டாடிய அதுல்யா தனது சமூகவளைதலத்தில் குழந்தை பருவ புகைபடத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.