இந்த வாரம் வெளியே போனது இவர்தான்.. பிக்பாஸ் பற்றி உறுதியான தகவல்

இந்த வாரம் வெளியே போனது இவர்தான்.. லேட்டஸ்ட் பிக்பாஸ் அப்டேட். சென்ற வாரம் எலிமினேஷன் இல்லை, ஆனால் இந்த வாரம் நிச்சயம் இருக்கும் என கமல் கூறினார். இந்நிலையில் இன்று இயக்குனர் சேரன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டதாக உறுதியான தகவல் வந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருந்தினர்களாக சென்ற சாக்ஷி உள்ளிட்ட மற்றவர்களும் வெளியே சென்றுள்ளனர்

லாஸ்லியாவை பற்றித்தான் இப்படி கோபமாக பேசுகிறாரா கமல்? பிக்பாஸ் புதிய டீஸர்

இந்த வாரம் சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளிட்டவர்கள் புதிதாக பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினர்களாக வந்துள்ளனர். அவர்கள் மற்ற போட்டியாளர்களுக்கு விருது கொடுக்கவேண்டும் என பிக்பாஸ் நேற்று கூறினார். அப்போது அவர்கள் கொடுத்த பச்சோந்தி என்கிற விருதை லாஸ்லியா கோபத்துடன் தூக்கி எறிந்தார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வந்துள்ளார். தற்போது வந்துள்ள புதிய டீசரில் கமல் கோபத்துடன் பேசியுள்ளார். “வெற்றி முக்கியம் தான். எப்படியாவது வெற்றி பெறுவேன் என்பது ஒரு முறை, இப்படி தான் வெல்வேன் என லட்சியத்தோடு வெல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டாவது தான் சிறந்தது” என கூறியுள்ளார் கமல். லாஸ்லியா செய்தது பற்றித்தான் இப்படி சொல்கிறாரோ

49 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் ரம்யா கிருஷ்ணன்! வாயை பிளந்த ரசிகர்கள்..!

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் நாகர்ஜுனா அண்மையில் தனது 60-வது பிறந்த நாளைக் கொண்டாட குடும்பத்துடன் ஸ்பெயின் சென்றுள்ளார் நாகார்ஜுனா. அவர்தான் தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். சீரியல் ரசிகர்களுக்கு ஒரு விஷயம் பழகியதுதான். இனி இவருக்குப் பதில் அவர் என்று ஸ்லைடு போடுவார்கள். சின்னத்திரையில் சகஜமான ஒரு விஷயம் தான் ஆள் மாற்றம். ஸ்பெயினிலிருந்து இந்தியாவுக்கு இன்னும் திரும்பாத நாகார்ஜுனாவுக்குப் பதிலாக, சானல் அவர் பரிந்துரைத்த ரம்யா கிருஷ்ணனை தொகுத்து வழங்குபடி கேட்க, ரம்யா பாகுபலி சிவகாமி கெட்டப்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரது வருகையை பிக் பாஸ் வீட்டில் இருந்தோருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ரம்யா கிருஷ்ணன் விடியோ கால் மூலம் நாகார்ஜுனாவிடம் பேசினார். நாகார்ஜுனா திரும்பி வரும்வரையில் ரம்யாவே நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவார் என்கிறது…

வாடா போடானு பேசுவியா நீ? லாஸ்லியா-மோகன் வைத்யா இடையே நடந்த சண்டை

பிக்பாஸில் இன்று போட்டியாளர்கள் அனைவருக்கும் விருது கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது. வெளியில் இருந்து வெளியில் சென்ற மோகன் வைத்யா, சாக்ஷி ஆகியோர் விருது கொடுக்க ஆரம்பித்தனர். முதலில் லாஸ்லியாவுக்கு தான் பச்சோந்தி என விருது கொடுத்தனர். அவர் கோபமாகி அதை அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டார். அதன் பிறகு இது பற்றி பெரிய சண்டை நடந்தது. அப்போது லாஸ்லியா தன்னுடைய கருத்தை கோபமாக பேசுக்கொண்டிருந்தார். அந்த விருதை வாங்க முடியாது என உறுதியாக இருந்தார் அவர். லாஸ்லியா “ஹலோ” என கூற, “என்ன ஹலோ, மரியாதையா பேசு.. வாடா போடானு பேசுவியா நீ?” என கூறினார். “நான் அப்படி பேசவே இல்லையே. மரியாதை கொடுத்துதான் பேசிக்கொண்டிருக்கிறேன்” என அவருக்கு பதில் கொடுத்துவிட்டு அமைதியாகிவிட்டார் லாஸ்லியா. அந்த நிகழ்ச்சி முடிந்தபிறகு தனியாக சென்று “நான் ஹெலோ என…