Siima Awards விருது சிறந்த நடிகற்கான விருது யாருக்கு தெரியுமா

கத்தாரில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில், அடங்கமறு படத்திற்காக நடிகர் ஜெயம் ரவிக்கு சிறந்த நடிகருக்கான விருதும், 96 படத்துக்காக திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி கத்தாரில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. நான்கு மொழி சினிமாக்களில் இருந்து ஏராளமான நட்சத்திரங்கள் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டனர். வடசென்னை படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதினை 96 படத்திற்காக திரிஷா பெற்றார். இதில் விமர்சன ரீதியாக சிறந்த நடிகருக்கான விருது ஜெயம்…

மதுமிதா தற்கொலை முயற்சி உண்மை தான் வெளிவந்த புதிய வீடியோ இதோ

மதுமிதா தற்கொலை முயற்சி உண்மை தான் வெளிவந்த புதிய வீடியோ இதோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரொமோ பல மணிநேரம் தாமதமாக தற்போது வெளியாகியுள்ளது. இதில் மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறியதால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக மதுமிதா சக ஆண்போட்டியாளர்களை பேசிய விதம் பாரிய சண்டையில் கொண்டு போய் விட்டது. இந்த சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில் இன்று ப்ரொமோ வெளிவராததற்கு காரணம் மதுமிதா தற்கொலை என்று கூறப்பட்டது தற்போது ப்ரொமோ வெளியாகி உறுதிபடுத்தியுள்ளது. அதிர்ச்சியடைய வைக்கும் ப்ரொமோ காட்சி இதோ!

பாத்ரூமில் அரைகுறை உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அனேகன் ஹீரோயின்

அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா டஸ்துர். இவர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் ரிலீஸ் ஆகி வசூலை குவித்த Judgementall Hai Kya படத்தில் அவரது நடிப்பு பற்றி பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அமைரா டஸ்துர் தற்போது பாத்ரூமில் ஹாட்டான உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்துவருகிறது. தற்போது அதற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது.

செய்திகள் கதிர் நடிக்கும் ஜடா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்

நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு விளையாடு, கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். விஜயின் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் அடுத்த படம் ஜடா. இப்படத்தை குமரன் எழுதி இயக்குகிறார். பொயட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம். சாம் சி எஸ் இசை. ஏ பி சூர்யா ஒளிப்பதிவு. எடிட்டிங் ரிச்சர்ட் கெவின். இந்த திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தில் ரோஸ்ணி, சமுத்திரக்கனி ,யோகி பாபு ,கார்த்திக் போன்ற பலர் நடித்துள்ளனர். முதல் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தற்பொழுது இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது.

சில்க் ஸ்மிதாவாக மாறிய பிக்பாஸ் பிரபலம்..! வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் பிரபலமான பிந்து மாதவி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து உள்ளார். இவர் நடித்து வெளிவந்த தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா,  மற்றும் பசங்க-2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் முன்னாள் நடிகை சில்க் ஸ்மிதா போலவே இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடனம் மற்றும்  நடிப்பில் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளவர். அவர் தனக்கு ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டார் இது ரசிகர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. இதோ உங்களுக்காக அந்த புகைப்படம்.

நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகள்.. Like’s அள்ளி குவிகின்றது! நீங்க பாத்தீங்களா!

நடிகர் பரத் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். இவர் நடித்த காதல், எம்டன் மகன், வெயில் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2013ம் ஆண்டு தனது நெருங்கிய தோழியை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் கடந்த 11 ஆகஸ்ட் 2018 ல் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இதனை அவர் மகிழ்ச்சியுடன் தன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மிக மெல்லிய உடையில் பேட்ட பட நடிகை மாளவிகா.! இதல்லாம் ஒரு டிரெஸ்ஸா ரசிகர்கள் கிண்டல்

கடந்த பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் பேட்ட, இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா, இவர் பேட்ட திரைப்படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார், ஆனால் இதற்கு முன் ஹிந்தி மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தவர். அடிக்கடி இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார், அதேபோல் இவரின் சமூக வலை தளம் முழுக்க கவர்ச்சி புகைப்படங்கள் தான் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் மிக மெல்லிய ஆடையில் போஸ் கொடுத்துள்ளார் இதோ புகைப்படம்.

அட இது நம்ம நமிதாவா இது-புகைப்படத்தை பார்த்து வாய்பிளந்த ரசிகர்கள்

நடிகை நமிதா தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப்படங்களில் நடித்து மார்க்கெட்டைப் பிடித்த நமிதா விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். இப்படி தமிழக மச்சான்ஸ்களின் மனதில் கூடுகட்டி வாழ்ந்த நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பட்டிதொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டார். நமிதா பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகை நமீதா தனது நீண்ட நாள் நண்பர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டு அழகான வாழக்கையை வாழ்ந்து வருகிறார். பொதுவாக திருமணத்திற்கு பிறகு பெண்கள் பெயரும் எடை கூடுவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் நமீதா அப்படியே உல்ட்டாவாக இருக்கிறார். ஆம், தற்போது நமீதான் உடல் எடையை குறைத்து கட்டான தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். சமீபத்தில் நடிகை நமிதா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று…

9 நாட்கள் முடிவில் நேர்கொண்ட பார்வை தமிழக மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் இரண்டு வாரம் ஆகியும் கோமாளி படம் வந்தும் நன்றாக தான் ஓடி வருகின்றது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படம் வெளிவந்து 9 நாட்கள் ஆகிய நிலையில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 62 கோடி வரை வசூல் செய்துள்ளது. இப்படம் இன்றே அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் போட்ட பணத்தை கொடுத்துவிடும் என கூறப்படுகின்றது. மேலும், இதை தொடர்ந்து வரும் வசூல் அனைத்துமே லாபம் தான், இதன் மூலம் தல அஜித் ஒரே வருடத்தில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்திலேயே ரூ.7 கோடி சம்பளம் பெற்ற நடிகை

திரிஷா, நயன்தாரா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளையே மிஞ்சும் வகையில் நடிகை ஒருவர் முதல் படத்திலேயே ரூ.7 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம். அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற ஒரு சில முன்னணி நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களும் 3 முதல் ரூ.4 கோடிக்குமேல் வாங்கியதாக தெரியவில்லை. இவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதல் படத்திலேயே அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார் ஷ்ரத்தா கபூர். பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஷ்ரத்தா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்து இறுதிகட்ட பணி நடக்கிறது. இம்மாத இறுதியில் ரிலீசாகிறது. வழக்கமாக இந்தி படங்களில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் ஷ்ரத்தா, சாஹோ படத்துக்காக ரூ.7 கோடி…