சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘ரஜினி 168’ கிராமத்து பின்னணியில் அசத்தலான கதை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. தல அஜீத்தை வைத்து ‘வீரம்’, ‘விஸ்வாசம்’ போன்ற கிராமத்து பின்னணியில் உருவான வெற்றி படங்களை கொடுத்த சிவா, சூப்பர் ஸ்டாரிடமும் அதுபோன்ற கிராமத்து பின்னணியில் நடக்கும் கதையைக் கூறி சம்மதம் வாங்கியுள்ளார் என்றும், அந்த படத்தின் படப்பிடிப்பு சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளில் துவங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘தர்மதுரை’, ‘எஜமான்’, ‘முத்து’ போன்ற படங்களில் கிராமத்து இளைஞனாகத் தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு சூப்பர் ஸ்டார் நடித்திருந்தார். அந்த படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரமும், அவரது ஸ்டைலும் இன்னும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. மீண்டும் அதுபோன்ற கதாபாத்திரத்தில் அவரை பார்க்க ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இயக்குநர் சிவாவும் கிராமத்து கதை என்றால் ஒரு கை பார்த்துவிடுவார்.…

“நான் ப்யூர் தமிழ்ப்பொண்ணுங்க..” பீர் குடித்தபடியே லைவ்வில் பேசிய பிக் பாஸ் மீரா.. வைரலாகும் வீடியோ!

பீர் குடித்துக்கொண்டே தான் ஒரு தமிழ் பெண் தான் நடிகை மீரா மிதுன் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. சர்ச்சை ராணி மீரா மிதுன் இப்போதெல்லாம் எதை செய்தாலும் அது வைரலாகிவிடுகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் லேட்டாக நுழைந்தாலும், அதிரடி கிளப்பினார் மீரா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக சண்டை சச்சரவுகளை கூட்டினார். எல்லோர் மீதும் பழிபோட்டார். கடைசியாக சேரன் தலையில் கையை வைத்ததும் 5வது வாரமே கல்தா கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார் மீரா. ஆனால் அப்போதும் அவர் அடங்கியதாக தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசும் போதெல்லாம் சேரனை வசைபாடியே வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த சேரனின் மனைவி, மீரா கன்னத்தில் பெளேர் என அறைந்ததாகக் கூட ஒரு தகவல் வெளிவானது. ஆனால் இது எது பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.…

அழகான கிளியாம் லொஸ்லியா! சேரனை பற்றி கமலிடம் என்ன இப்படி கூறிவிட்டார் கஸ்தூரி

பிக்பாஸில் 17வது போட்டியாளராக மிகுந்த பரபரப்புக்கு இடையே கடந்த வாரம் நுழைந்தார் நடிகை கஸ்தூரி. அதனால் இன்றைய எபிசோட்டை தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்திருந்தனர். ஏனெனில் இந்த ஒரு வாரத்தில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் கஸ்தூரி எவ்வாறு புரிந்துகொண்டுள்ளார் என்பதை கமலிடம் சொல்வார் என்பதற்காக தான் காத்திருந்தனர். அதேபோன்று கமல் போட்டியாளர்களை பற்றி கஸ்தூரியிடம் கேட்க, மதுமிதா தமிழ்பொண்ணு, அபிராமி, ஷெரீன், ஷாக்சி லூசு பொண்ணுங்க. லாஸ்லியா அழகான கிளி, தங்கமான பொண்ணு, முகேன் ஒரு மொக்க ஜோக் என்று கூறினார். அதோடு சேரன் உடை அணிந்து வந்திருக்கும் நபர் உண்மையில் சேரன் இல்லை, ஏனெனில் நான் பார்த்த சேரன் வேறு, இங்கிருக்கும் சேரன் வேறு, அவருக்கு அவ்ளோ கோபம் வரும் என்றும் கூறினார். இதனால் சேரன் வெற்றிக்காக தன்னுடைய உண்மை முகத்தை காட்டாமல் நடித்து வருகிறாரோ என்ற…