பிக்பாஸில் இந்த வாரம் வெளியே போனது இவர்தான்.. லேட்டஸ்ட் தகவல்

பிக்பாஸ் 3வது சீசன் தற்போது 48 நாட்களை கடந்துள்ளது. இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா ஆகியோர் உள்ளனர். அவர்களில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் தற்போது உள்ளது. தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் நடிகை சாக்ஷி அகர்வால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். அது நாளை எபிசோடு ஒளிபரப்பாகும்போது உறுதியாக தெரிந்துவிடும்.

நடிகை அமலா பாலை வறுத்தெடுத்த ரசிகர்கள்! சர்ச்சையில் விசயத்தால் வந்த பிரச்சனை

நடிகை அமலா பால் அண்மையில் வெளியான ஆடை படத்தில் கதை கருவாக நடித்திருந்தார். ஆடையில்லாமல் அவர் படத்தில் நடித்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அவரின் நடிப்பு பாராட்டி பேசப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகள் படத்திற்கு இருந்த போதிலும் கலவையான விமர்சனங்களால் படம் நிற்கமுடியாமல் போய்விட்டது. இது ஒரு பக்கம் இருக்க அவர் அண்மையில் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து கூறினார்.  இது குறித்து அவர் பதிவிட்டுருந்த புகைப்படத்தால் சமந்தப்பட்ட கட்சியை விரும்பாதோர் அவரை திட்டி தீர்த்துள்ளனர். அதே வேளையில் இந்த பதிவை 1.19 லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள்.

நேர்கொண்ட பார்வையில் அஜித் சொன்ன அதே கருத்தை எந்த நடிகரெல்லாம் கூறியுள்ளனர்? இதோ சின்ன வீடியோ எடிட்

அஜித்தின் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை ரசிகர்களை தாண்டி சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஒரு பெரிய நடிகர் தனது மாஸான காட்சிகளை எல்லாம் தவிர்த்து பெண்களுக்கு அதுவும் பணக்கார பெண்களுக்கு நீதி வழங்கும்படியான படத்தில் நடித்திருப்பது அஜித்தின் பெயரை இன்னும் பல ஆண்டுகள் ஒலிக்க செய்யும். ஆனால் அஜித்தின் இந்த கருத்தை சிவாஜி, ரஜினி உள்பட சில நடிகர்கள் ஏற்கனவே தனது படங்களில் கூறியுள்ளனர். அவற்றை அஜித் ரசிகர்களே எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.

ரஜினியாக மாறி சேரன் கேட்ட கேள்வி, கமல் சொன்ன அட்டகாசமான பதில்! திட்டமிட்டு நீக்கிய பிக்பாஸ் நிர்வாகம்

கடந்த 4ஆம் தேதி பிக்பாஸ் எபிசோடில் போட்டியாளர்கள் சினிமா பிரபலங்களாக மாறி கமலை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது. இதில் ரஜினியாக வேடமிட்டிருந்த சேரன் கமலிடம், எனக்கு சில அரசியல் கேள்விகள் உங்ககிட்ட இருக்கு. நானும் நீங்களும் ஒரு 40 வரு‌ஷம் நடிகர்களாக பயணம் பண்ணிட்டோம். நாம நடிகர்களாக இருந்தபோது மக்கள் நம்ம கிட்ட என்ன கேட்டார்களோ அத முடிந்த வரைக்கும் சிறப்பா கொடுத்துருக்கோம். இப்போது நானும் அரசியலில் குதிக்க நினைத்துக்கொண்டு இருக்கிறேன், நீங்க குதிச்சிட்டீங்க… நடிகர்களாக இருந்து அவர்களை திருப்திபடுத்திய நாம், அரசியல் தலைவர்களாக மாறி, அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் திருப்தி அடைகிற மாதிரி வேலை செய்ய முடியுமா? என கேள்வி கேட்டார். இதற்கு கமல், அவர்கள் எதிர் பார்ப்பதில் ஒன்று, இப்படி நானும் நீங்களும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது தான். முடியுமான்னு கேட்டீங்கன்னா, முனைந்தால்…