இதுவரை இல்லாதளவில் அதிரடி காட்டிய நேர்கொண்ட பார்வை! முதல் முறையாக முக்கிய இடத்தில்

நேர்கொண்ட பார்வை படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள இப்படத்திற்கு அமோக வரவேற்பு பெற்றுள்ளது. சென்னை, மதுரை, கோவை என தமிழ்நாட்டின் பல முக்கிய இடங்களில் கொண்டாட்டம் பெரியளவில் இருப்பதை காணமுடிகிறது. இந்நிலையில் திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸில் விடுமுறை இல்லாத நாட்களில் டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்ததுள்ளது இதுவே முதல் முறை. பாக்ஸ் ஆஃபிஸில் ரேஜ் காட்டியிருக்கிறதாம். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அந்நிறுவனம் கூறியுள்ளது.

கவின் செய்த காதல் லீலைகள்- கஸ்தூரி மோசமான கலாய்

பிக்பாஸ் நிகழ்ச்சி புதிதாக நுழைந்திருப்பது நடிகை கஸ்தூரி. செய்திகள் வரும் போதெல்லாம் நான் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை என்று டுவிட் போட்ட அவர் இப்போது அந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். போன முதலில் இருந்து எல்லோரையும் கலாய்த்து வருகிறார், வெளியே நடந்த விஷயங்களையும் வைத்து பேசி வருகிறார். இன்று காலை வந்த புதிய புரொமோவில் கவினின் காதல் லீலைகள் குறித்து செமயாக கலாய்க்கிறார். அதில் கவினின் முகம் அப்படியே மாறுகிறது, இதோ அந்த புரொமோ.

பிக்பாஸ் வீட்டில் சாண்டியின் அருகில் இருக்கும் இதை கவனித்தீர்களா? தீயாய் பரவும் புகைப்படம்

பிக் பாஸ் வீட்டில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு பெயர் எழுதப்பட்டிருக்கும். அந்த பெயர் யாருடையது என்ற குழப்பம் பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அது டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தையின் பெயர்தான். எப்போதும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குறும்பு தனம் பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவருடைய நகைச்சுவைக்கும், நடனத்துக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். எப்போதும் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் அவர் மகளின் பெயரை சொன்னதுமே பிக் பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.அப்போதே தெரிந்திருக்கும் குழந்தையின் மீது அவர் வைத்திருந்த பாசம் பற்றி. அதன் உச்சக்கட்டத்தின் வெளிப்பாடே இது என்று கூட கூறலாம். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் கவர்ச்சியான பெல்லி டான்ஸ் – வைரலாகும் வீடியோ

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளர் என சில வாரங்கள் முன்பு செய்தி பரவியது. ஆனால் அது உண்மையில்லை என பின்னர் தெரியவந்தது. இதுஒருபுறமிருக்க ஜான்வி கபூர் ஜிம் மற்றும் டான்ஸ் க்ளாஸ் செல்லும் விடீயோக்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். இந்தமுறை ஜான்வி தன்னுடைய டான்ஸ் கிளாசில் கவர்ச்சியான பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.