பிக்பாஸில் இருந்து வெளியே வந்துவிட்ட மீரா மீண்டும் இளைஞருடன் கட்டிப்பிடித்து நடனம் வீடியோ இதோ

பிக்பாஸில் இருந்து கடந்த வாரத்திற்கு முன்வாரம் வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். மாடலிங் துறையை சேர்ந்த இவர் மிஸ் தென்னிந்தியா பட்டத்தையும் பெற்று பின்பு பறிக்கொடுத்தவர். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் சேரன் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டை கூறியது தான். மீராவின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன் இளைஞர் ஒருவருடன் அவர் நடனமாடும் வீடியோவை நெட்டிசன்ஸ் இணையத்தில் பரவவிட்டனர். தற்போது பிக்பாஸில் இருந்து வெளியே வந்துவிட்ட மீரா மீண்டும் இளைஞருடன் கட்டிப்பிடித்து நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 35 நாட்களுக்கு பிறகு மீண்டும் தான் தவறவிட்ட வாழ்க்கை கிடைத்திருப்பதாக குறிப்பிட்டு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அஜித் ரசிகர்களின் செயலால் அழுதுகொண்டே திரையரங்கை விட்டு வெளியேறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்

சில மாதங்களாக பெரிதாக எதிர்ப்பார்க்கப்பட்ட அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெற்றிகரமாக இன்று வெளியாகி விட்டது. ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர், முதல் நாள் முதல் ஷோ அட்டகாசங்கள் வேற லெவலில் இருக்கிறது. நான் நடித்த படத்தை முதல் நாள் பார்க்க வந்துள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை பார்த்து ஆனந்த கண்ணீருடன் திரையரங்கை விட்டு வெளியேறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்

மாஸ் கமர்ஷியல் வெற்றி கொடுத்து சென்றுவிடலாம் என்று நினைக்காமல் ஒரு இடத்திற்கு வந்துவிட்டோம் என அஜித் சமூக அக்கறையோடு படம் நடிக்கிறார். அப்படி முக்கிய பிரச்சனையை பேசும் படமாக அவர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. படம் எப்படி வந்துள்ளது பார்ப்போம். கதைக்களம் ஷ்ரத்தா, அபிராமி, ஆண்ட்ரியா சுதந்திரமாக தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி ஒரு நாள் நண்பர்களுடன் ரூமில் இருக்கும் போது ஒரு ஆண் நண்பர் எல்லை மீறுகிறார் ஷ்ரத்தாவிடம். அப்போது ஷ்ரத்தா அவரை பாட்டில் வைத்து அடித்துவிட்டு அங்கிருந்து வெளியே வருகின்றனர். அடிபட்டவர்கள் மிகவும் பெரிய இடத்து பிள்ளைகள். அதனால் அந்த பெண்களுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்க, அந்த நிகழ்வை அஜித் துல்லியமாக கவனித்து வருகிறார். அப்படி கவனித்து வரும் போது ஒரு நாள் அந்த வழக்கை…

பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியா புகழ்ந்து கூறிய அவரது நெருங்கிய தோழி இவர்தானாம்! போட்டோ இதோ

பிக்பாஸில் நேற்றையை எபிசோட்டில் போட்டியாளர்களுக்கு சின்னதாக டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதாவது தனக்கு பிடித்த அன்பானவர்களை பற்றி கூற வேண்டும். அந்த வகையில் லொஸ்லியா, தனக்கு பிடித்த அன்பானவர் என்றால் அது எனது தோழி தர்ஷி கிருபா தான். அவளுக்கும் எனக்கும் பல முறை சண்டை வந்திருக்கிறது. ஆனால் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் சொடக்கு போடும் நேரத்தில் வந்து நிற்பாள் என்று கூறினார். இதனால் லொஸ்லியா ஆர்மி இவர் யார்? எங்கு இருக்கிறார் என்று வலை வீசி தேடியது. இந்நிலையில் ரேடியோ ஒன்றில் ஆர்.ஜே.வாக இருக்கும் தர்ஷி கிருபாவை பிரபல ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அதில் அவர் கூறுகையில், அவளுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவள் என் பெயரை சொன்ன போதே, நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். அவள் அதிகமாக கோபப்படுபவள் கிடையாது. ஆனால் அங்கிருப்பவர்கள்…