என்ன ஆனது அஜித் ரசிகர்களுக்கு, அந்த இடத்திலேயே முன்பதிவில் தடுமாறும் நேர்கொண்ட பார்வை

அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பிரமாண்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. அப்படியிருக்க இப்படத்தின் முன்பதிவு சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல இடங்களில் தொடங்கிவிட்டது. முன்பதிவு தொடங்கிய அனைத்து இடங்களிலும் பல காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி வருகின்றது, அதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம். ஆனால், அஜித் கோட்டையாக இருக்கும் மாயஜால் மல்டிப்ளக்ஸ் திரையரங்கில் இதுவரை 47 காட்சிகள் ஓபன் செய்யப்பட்டு, 10 தான் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. ஏன் இந்த இடத்தில் இந்த தடுமாற்றம் என்று தெரியவில்லை. பார்ப்போம், இன்னும் எத்தனை காட்சிகள் அங்கு வரும் என்று.

பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சன்னி லியோன்! பெரும் சர்ச்சையை உண்டாக்கிய விவகாரம்

நடிகை சன்னி லியோன் ஆபாச பட நடிகையாக இருந்து பாலிவுட் சினிமாவுக்கு வந்தவர். பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் அர்ஜூன் பாட்டியாலா படத்தில் ஒரு போன் நம்பர் படத்தை குறிப்பிட அதை கொண்டு பலர் அந்த நபர் ஒருவர் தொடர்ந்து 400 முறை கால் செய்துள்ளார். ஆனால் அந்த போன் நம்பருக்கு சொந்தமான புனித் என்பவர் தொடர்ந்து தொந்தரவுகளை சந்தித்ததால் போலிஸிஸ் புகார் அளித்திருந்தார். இவ்விவகாரம் சன்னி லியோன் காதுகளை எட்ட அவர் மன்னிக்கவும், உங்களுக்கு இப்படி நடக்க வேண்டும் என்று நினைத்து அப்படி செய்யவில்லை. இருந்தாலும் சுவாரசியமான மனிதர்களிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கும் என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

குடும்ப குத்துவிளக்காக “கருப்பன்” படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரனா இது..? – ரசிகர்கள் ஷாக் – புகைப்படங்கள் உள்ளே

இளம் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இவர், பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். தான்யாவிற்கு இளம் வயதில் இருந்து அவரது தாத்தாவின் வேலையைப் பார்த்ததால் நடிப்புத் துறையில் ஆர்வம் அதிகம். அவரது தாயார், லாவண்யா ஸ்ரீராம் ஒரு நாட்டியக் கலைஞராவார். இதனால் தான்யா மற்றும் அவரது சகோதரி அபராஜிதா ஆகிய இருவரையும் பரதநாட்டியம் கற்றுக்கொடுத்தார். சகோதரிகள் இருவரும் சென்னையில் தங்களின் பதின் வயதுகளின் போது பல மேடைகளில் தங்கள் பரதநாட்டியத்தை அரங்கேற்றியுள்ளனர். அவர் திரைப்படத் துறையில், நுழைவதற்கு முன்னதாக இளங்கலை வணிகவியல் பட்டத்தை சென்னையில் உள்ள எம். ஓ. பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரியிலும் அதைத் தொடர்ந்து மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க்ஸ் கல்லுாரியில் முதுகலை வணிகவியல் பட்டத்தையும் பெற்றார். 2016 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், தான்யா முதலில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதற்காக தேர்வு…

பிக்பாஸில் இருந்து வெளியே போனது இவர்தான்! லேட்டஸ்ட் தகவல்.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் யார் என்பது பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் சாக்ஷி, கவின், மதுமிதா, அபிராமி மற்றும் ரேஷ்மா எவிக்ஷன் பட்டியலில் உள்ளனர்.  அவர்களில் மதுமிதா காப்பாற்றப்படுவதாக கமல் சனிக்கிழமை எபிசோடில் அறிவித்துவிட்டார். இந்நிலையில் தற்போத ரேஷ்மா பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளது. கவின் அல்லது சாக்‌ஷி ஆகியோரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத இந்த ட்விஸ்ட் நாளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது .