பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் செய்த வேலை- அவரது காதலி எடுத்த முடிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடியது லாஸ்லியாவை தான். ஆனால் அவரின் செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மோசமாக மாறி வருகிறது, அதை மக்களும் உணர்ந்துள்ளனர். நிகழ்ச்சி நடுவில் தர்ஷன் மற்றும் ஷெரின் இருவரும் கொஞ்சம் நெருக்கமாக இருந்தார்கள், இப்போது அப்படி இல்லை. அண்மையில் ஒரு பேட்டியில் தர்ஷனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி ஒரு மாதத்திற்கு முன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வீர்களா என்று கேட்டால் சந்தோஷமாக செல்வேன் என்று கூறியிருப்பேன். ஆனால் இப்போது தர்ஷனின் சில செயல்கள் கொஞ்சம் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த நேரத்தில் நான் பிக்பாஸ் செல்வது சரியாக இருக்காது அதனால் போக மாட்டேன் என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது, இவர்தானாம்- அவரே புகைப்படத்துடன் கொடுத்த போஸ்

தமிழில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி படு பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் ஒரே காதல் சர்ச்சைகள் அதிகம் பேசப்படுகிறது. கவின், சாக்ஷி, லாஸ்லியா மூவரின் முக்கோண காதல் கதை எப்போது முடியுமோ என்ற வெறுப்பில் ரசிகர்கள் உள்ளார்கள் என்று கூறலாம். இந்த நிகழ்ச்சியில் அடுத்து Wild Card எண்ட்ரீயாக நடிகைகள் கஸ்தூரி, சனம் ஷெட்டி, ஆல்யா மானசா போன்றோர் நுழைய இருப்பதாக செய்திகள் வர அவர்கள் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் வெளிநாட்டில் நடிகர், பாடகர், நடன ஆசிரியர் என எல்லா துறையிலும் கலக்கி வரும் ஜான்சன் பிலிக்சன் தான் பிக்பாஸில் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் அவர் இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து கிளம்பியுள்ளார், அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாக பிக்பாஸ் Wild Card எண்ட்ரீ என்கின்றனர்.

யாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தினமும் சந்தோஷமான போட்டியாளர்கள் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் தினமும் வரும் புரொமோவில் அழும் காட்சிகள் இடம்பெற்று விடுகிறது. இன்று காலை வந்த புதிய புரொமோவில் கவின்-சாக்ஷி தன்னை காலி செய்கிறாள் நான் இனி அந்த பக்கம் செல்ல மாட்டேன் என்று கூற அவர் அழுகிறார். பின் லாஸ்லியா எல்லோரிடமும் வந்து சாக்ஷிக்கு நடந்த துரோகத்திற்கு நான் தான் காரணம், என்னிடம் யாரும் பேசவேண்டாம் என அவரும் அழுகிறார். இதோ அந்த சோக வீடியோ.