வித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.! – வைரலாகும் புகைப்படம்..!

manju warrier

அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகையான இவர் தற்போது மலையாளத்தில் நடித்துள்ள படம் காயாட்டம். 

இந்த படத்தில் மஞ்சு வாரியர் நாடு முழுதும் நடந்தே சுற்றித்திரியும் தேசாந்திரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கேற்றவாறு இந்தப்படத்தில் மஞ்சு வாரியருக்கும் விதவிதமான கெட்டப்புகள் இருக்கின்றதாம். 

அதில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் மஞ்சு வாரியாரின் போஸ்டர் ஒன்றை ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். தேசியவிருது பெற்ற சனல்குமார் சசிதரன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மஞ்சு வாரியரும் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைந்துள்ளார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் மணாலியில் படப்பிடிப்பு நடந்தபோது, இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் அந்த பகுதி துண்டிக்கப்பட்டது. இதில், மஞ்சு வாரியார் உட்பட படகுழுவில் பலரும் சிக்கிக்கொண்டனர்.

 அதன் பின் சில நாட்கள் கழித்து மஞ்சு வாரியார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related posts

Leave a Comment