வருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால்.

இவருக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால் சிலர் இவருக்கு எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர்.

நேற்று (அக்டோபர் 5) காஜலின் திருமணம் பற்றிய செய்தி வந்தது, ஆனால் அவர் எதுவும் கூறாமல் இருந்தார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது டுவிட்டரில் எனக்கு தொழிலதிபர் கௌதம் என்பவருடன் அக்டோபர் 30ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது என கூறியுள்ளார்.

இந்த தகவல் ரசிகர்கள் சிலருக்கு சந்தோஷம் என்றாலும் நம் காஜலுக்கு திருமணமா என்றும் வருத்தம் அடைந்துள்ளனர்.

Related posts

Leave a Comment