வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த் 166 படக்குழு

ரஜினிகாந்தும் ஏ.ஆர்.முருகதாசும் இணைவது கடந்த சில ஆண்டுகளாக தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இப்போது ஒரு வழியாக இருவரும் கைகோர்த்திருப்பதால் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
ரஜினி படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மும்பையிலேயே நடக்கிறது. ஒரே கட்டமாக முழு படத்தையும் முடிக்க தெளிவாக திட்டமிட்டிருக்கிறார் முருகதாஸ். சந்தோஷ் சிவன் கால்ஷீட்டை முன்கூட்டியே மொத்தமாக வாங்கிவிட்டார். ரஜினி மொத்தமாக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் பரவி வரும் நிலையில் அவை வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. ரஜினி ஒரு வேடத்தில் மட்டுமே நடிக்கிறார் என்று படக்குழு தெரிவித்தது. மார்ச் இறுதிக்குள் படப்பிடிப்பு துவங்குகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Related posts

Leave a Comment