லாஸ்லியாவை பற்றித்தான் இப்படி கோபமாக பேசுகிறாரா கமல்? பிக்பாஸ் புதிய டீஸர்

இந்த வாரம் சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளிட்டவர்கள் புதிதாக பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினர்களாக வந்துள்ளனர்.

அவர்கள் மற்ற போட்டியாளர்களுக்கு விருது கொடுக்கவேண்டும் என பிக்பாஸ் நேற்று கூறினார். அப்போது அவர்கள் கொடுத்த பச்சோந்தி என்கிற விருதை லாஸ்லியா கோபத்துடன் தூக்கி எறிந்தார்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வந்துள்ளார். தற்போது வந்துள்ள புதிய டீசரில் கமல் கோபத்துடன் பேசியுள்ளார்.

“வெற்றி முக்கியம் தான். எப்படியாவது வெற்றி பெறுவேன் என்பது ஒரு முறை, இப்படி தான் வெல்வேன் என லட்சியத்தோடு வெல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டாவது தான் சிறந்தது” என கூறியுள்ளார் கமல்.

லாஸ்லியா செய்தது பற்றித்தான் இப்படி சொல்கிறாரோ

Related posts

Leave a Comment