ராகவா லாரன்ஸ் உடன் புதிய படத்தில் கமீட்டான ப்ரியா பவானி சங்கர்.. பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ

நிறைய அழகும் கொஞ்சம் திறமையும் இருந்தால் சினிமாவுலகில் பிழைத்துக் கொள்ளலாம் என பலர் கூறி கேள்வி பட்டு இருக்கிறோம் அப்படி சின்னத்திரையில் சீரியலில் நடித்து பின்னாட்களில் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர்.

ஆரம்பத்தில் சிறப்பான கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்த அதன் விளைவாக தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களின் பட வாய்ப்பை கைப்பற்றி நடிக்க வருகிறார்.

சமீபத்தில் கூட மாபிய சப்டர் 1 படத்தில் அருண் விஜய் உடன் நடித்தார் அதன்பின் இந்தியன் 2 படத்தில் கமலுடன் கமிட்டானார் தற்பொழுது ருத்ரன் என்ற திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் முதல் முறையாக இணைந்துள்ளார்.

இதனால் பிரிய பவனி சங்கரின் மார்கெட் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பல முன்னணி நடிகைகள் பலரும் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டே இருக்கின்றனர். தமிழ் ,தெலுங்கு என அடியெடுத்து வைத்து சென்சேஷனல் நடிகையாக மாறி உள்ளார்.

பிரிய பவனி சங்கர் ருத்ரன் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராமல் இருந்து வந்த நிலையில் தற்போது லாரன்ஸ் மற்றும் படகுழுவினருடன் பட பூஜையில் கலந்துகொண்டார்.

இந்த படத்திற்காக புதிய ஸ்டைலில் இருக்கிறார் ராகவா லாரன்ஸ் அதேபோல பிரிய பவனி சங்கர் மற்றும் உடல் எடையை கூட்டி செம நச்சுன்னு இருக்கிறார். இந்தப் படத்தை கஜேந்திரன் என்பவர் தயாரிக்க உள்ளார்.

இவர் இதற்கு முன்பாக ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ருத்ரன் படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.

Related posts

Leave a Comment