ரஜினி, விஜய், அஜித், தமிழ்சினிமாவின் யூட்யூப் சாதனைகளில் நம்பர் ஒன் யார்?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்றால் கடந்த 40 ஆண்டுகளாக ரஜினி மட்டுமே. ஆனால் தற்போது அவருக்கு போட்டியாக அஜித் விஜய் ஆகிய நடிகர்களும் வந்து விட்டனர். இவர்களின் ஒவ்வொரு படங்களும் ரிலீஸ் ஆகும் பொழுது யூடிபில் அதிக பார்வைகள் அதிக லைக்குகள், அதிக டிஸ்லைக்குகள் யாருடைய படத்திற்கு கிடைத்தது என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு இடையே போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

விஜய் சாதனை

விஜய் சமீபத்தில் அவரது படங்களுக்கு டிரைலர் ரிலீஸ் செய்யப்படவில்லை. கடைசியாக பைரவா படத்திற்கு பிறகு அவருடைய படத்திற்கு டிரெய்லர்கள் ரிலீசாகவில்லை. தற்போது தான் இருக்கு பிகில் டிரைலர் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

1) பைரவா படத்தின் டிரைலர் 10 மில்லியன் பார்வைகள்

2) தெறி படத்தின் டிரைலர் 14 மில்லியன் பார்வைகள்

3) புலி படத்தின் டிரைலர் 9.8 மில்லியன் பார்வைகள்

4) கத்தி படத்தின் டிரைலர் 6.6 மில்லியன் பார்வைகள் கிடைத்தன

மெர்சல், சர்க்கார் படங்களுக்கு ட்ரெய்லர் வெளியிடப்படவில்லை.

அஜித் சாதனை

1) விசுவாசம் படத்தின் டிரைலர் 31 மில்லியன் பார்வைகள்

2) நேர்கொண்டபார்வை படத்தின் டிரைலர் 16 மில்லியன் பார்வைகள்

3) விவேகம் படத்தின் டிரைலர் 16 மில்லியன் பார்வைகள்

ரஜினி சாதனை

1) பேட்டை படத்தின் டிரைலர் 26 மில்லியன் பார்வைகள்

2) 2.0 படத்தின் டிரைலர் 20 மில்லியன் பார்வைகள்

3) காலா படத்தின் டிரைலர் 13 மில்லியன் பார்வைகள்

ஒட்டுமொத்தமாக பார்த்தால் அஜித் இருந்தாலும், ரஜினியாக இருந்தாலும், விஜய் ஆனாலும், ஒரு படத்திற்கு அமையும் இயக்குனர்கள், பாடல்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தொடங்கி மக்கள் மனதில் பதியும் அபிப்பிராயத்தில் அடிப்படையில்தான் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அமைகிறது. நட்சத்திர அந்தஸ்து என்பது இரண்டாவது பட்சம்தான்.

இருபது வருடங்களுக்கு முன்பு ரஜினி மீது இருந்த வெறித்தனத்தை இப்போது இருந்த டெக்னாலஜி அப்போது இருந்திருந்தால் யாருமே நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கான டிரைலர் டீசர் ரெக்கார்டுகளை அன்றே ரஜினி சாதனை படைத்திருப்பார். இன்னும் நூறு வருடங்கள் ஆகியிருந்தாலும் அந்த ரெக்கார்டுகளை யாராலும் முறியடிக்க முடியாது. ஆனால் தற்போது அதே ரஜினி தான் காலா படத்தின் ஹீரோ ஆனால் எதிர்பார்ப்பு என்பது குறைவாக இருந்த காரணத்தால் ட்ரெய்லரின் ரெஸ்பான்ஸ் குறைந்ததை நாம் காணமுடிகிறது. ஆனால் அதே நேரத்தில் பேட்டை படத்தின் ரெஸ்பான்ஸ் மிக அதிகம் அதிகம் ஏனெனில் எதிர்பார்ப்பு அதிகம்.

ஸோ, இங்கே டிரைலர், டீசர் என்ற யூடியூப் மாயாஜாலங்களில் இந்த ஹீரோ தான் நம்பர்.1 என்று யாரையுமே குறிப்பிட முடியாது என்பதே நிதர்சனம். ஒவ்வொரு நடிகர்களின் படங்கள் செய்யும் வசூல் அடிப்படையிலும், அதேநேரத்தில் தயாரிப்பாளர் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர் களுக்கு கிடைக்கும் லாபத்தின் அடிப்படையிலுமேதான் நம்பர் ஒன் முடிவு முடிவு செய்யப்பட வேண்டும்.

Related posts

Leave a Comment