ரஜினியாக மாறி சேரன் கேட்ட கேள்வி, கமல் சொன்ன அட்டகாசமான பதில்! திட்டமிட்டு நீக்கிய பிக்பாஸ் நிர்வாகம்

கடந்த 4ஆம் தேதி பிக்பாஸ் எபிசோடில் போட்டியாளர்கள் சினிமா பிரபலங்களாக மாறி கமலை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது.

இதில் ரஜினியாக வேடமிட்டிருந்த சேரன் கமலிடம், எனக்கு சில அரசியல் கேள்விகள் உங்ககிட்ட இருக்கு. நானும் நீங்களும் ஒரு 40 வரு‌ஷம் நடிகர்களாக பயணம் பண்ணிட்டோம். நாம நடிகர்களாக இருந்தபோது மக்கள் நம்ம கிட்ட என்ன கேட்டார்களோ அத முடிந்த வரைக்கும் சிறப்பா கொடுத்துருக்கோம்.

இப்போது நானும் அரசியலில் குதிக்க நினைத்துக்கொண்டு இருக்கிறேன், நீங்க குதிச்சிட்டீங்க… நடிகர்களாக இருந்து அவர்களை திருப்திபடுத்திய நாம், அரசியல் தலைவர்களாக மாறி, அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் திருப்தி அடைகிற மாதிரி வேலை செய்ய முடியுமா? என கேள்வி கேட்டார்.

இதற்கு கமல், அவர்கள் எதிர் பார்ப்பதில் ஒன்று, இப்படி நானும் நீங்களும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது தான். முடியுமான்னு கேட்டீங்கன்னா, முனைந்தால் முடியும். அதற்கு, நான் என்பது நாமானால் கண்டிப்பாக முடியும். இது இந்த ரஜினி(சேரன்) வந்தாலும் சொல்லுவேன், அந்த ரஜினி வந்தாலும் சொல்லுவேன் என அவரது ஸ்டைலில் கூறினார்.

ஆனால் இந்த காட்சியை பிக்பாஸ் நிர்வாகம் சர்ச்சையாக போகிறது என நீக்கிவிட்டது. இந்த காட்சியை பார்வையாளராக கலந்துகொண்ட மக்கள் நீதி மய்ய கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் : ஒரு குறும்பட உரையாடல் (ஒரு நீக்கப்பட்ட உரையாடல் )நம்மவரிடம் எல்லார் கேட்ட கேள்வியும் வந்துருச்சு, ஆனா…

Posted by Murali Appas on Isnin, 5 Ogos 2019

Related posts

Leave a Comment