முதல் படத்திலேயே விருது வாங்கிய ஜெயம் ரவி மகன்

சைமா விருது வழங்கும் விழாவில் டிக்டிக்டிக் படத்தில் நடித்த ஜெயம் ரவியின் மகன் ஆரவ், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றார்.

சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி கத்தாரில் நடைபெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், நான்கு மொழி சினிமாக்களில் இருந்தும் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட விழாவில் முதல் நாளான 15ம் தேதி தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2ம் நாளான நேற்று தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு விருது வழங்கப்பட்டன.

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட இந்த விருதுகளில், வடசென்னை படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

சிறந்த நடிகைக்கான விருது 96 படத்திற்காக திரிஷா பெற்றார். விமர்சன ரீதியாக சிறந்த நடிகருக்கான விருது அடங்கமறு படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு வழங்கப்பட்டது.

அதேபோல், டிக்டிக்டிக் படத்தில் நடித்ததற்காக ஜெயம் ரவியின் மகன் ஆரவ், சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டார்.

ஒரே மேடையில் அடுத்தடுத்து அப்பாவும், மகனும் விருது வாங்கிச் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

Related posts

Leave a Comment