முதன் முறையாக நீச்சல் உடையில் ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் “மேயாத மான்” இந்துஜா..!

‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. பக்கா தமிழ் பெண்ணான இவர், ‘மெர்குரி’, ‘பூமராங்’, ‘மகாமுனி’ உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

கடைசியாக, ‘தளபதி’ விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இருந்தாலும், இந்துஜாவால் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியவில்லை. தற்போது, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் ‘காக்கி’ படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது.

இதனால் பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக விதவிதமான உடைகளில் ரகரகமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இதுவரை குடும்ப கதாபாத்திரங்களிலும், கவர்ச்சி இல்லாத புகைப்படங்களையும் மட்டுமே பகிர்ந்து வந்த இந்துஜா சமீபகாலமாக இலை மறை காய் மறைவாக பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். 

வெப்சீரிஸ் மோகம்

தமிழ் சினிமாவில் தமிழ் நன்கு பேசத்தெரிந்த நடிகைகள் வெகுசிலரே இருந்துவரும் நிலையில், வேலூரை பூர்வீகமாக கொண்ட தமிழ் நடிகை இந்துஜா இப்பொழுது பல்வேறு திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து கலக்கிக் கொண்டு வருகிறார்.

சமீப காலமாக சினிமாவை காட்டிலும் வெப் சீரிஸ்களில் நடிக்கும் மோகம் நடிகைகள் மத்தியில் பரவிவருகின்றது. முன்னணி நடிகைகளான, நித்யா மேனன்,அஞ்சலி ஆகியோர் வெப்சீரிஸில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டி கிரங்கடித்தனர்.

சினிமாவுக்குநிகரான சம்பளம், சென்சார் பிரச்சனை நஹி என்பதால் வெப் சீரிஸ் நோக்கி நடிகைகள் படையெடுத்து வருகிறார்கள்.

முதன் முறையாக நீச்சல் உடையில் 

இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய மேயாதமான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட நடிகை இந்துஜா அதற்கு முன் பல குறும்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

எனினும் மேயாத மான் திரைப்படம் பெரிய திரையில் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்த நிலையில் அந்தப் படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருப்பார்.

இந்நிலையில், இவர் தற்போது கமிட்டகியுள்ள தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சமீப காலமாக, ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தமிழ் நடிகைகள் ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்துஜாவும் இணைந்துள்ளார். 

Related posts

Leave a Comment