மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரியா வாரியார்!வலுவடையும் பிரச்சனை!

தென்னிந்திய நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது சர்ச்சைக்கு சொந்தக்காரியாக திகழ்கிறார்.

இவர் முதலில் அறிமுகமான படமான “ஒரு ஆதார் லவ்” என்ற படத்திற்கு பின் இவருக்கு பல பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது அதிலும் குறிப்பிடும் படியாக வந்த படம் தான் ஸ்ரீ தேவி பங்களா என்ற திரைப்படம் இதன் முதல் டீசர் வந்த போதே மறைந்த ஸ்ரீ தேவி பெயரை வைத்து படம் எடுக்கக்கூடாது என்றும் தலைப்பை மாற்றும் படியும் சர்ச்சைகள் எழுந்தது.

தற்போது இப்படத்திற்கான இரண்டாவது டீசர் வெளியாகி மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது இந்த டீசரில் ஒரு காட்சியில் குளியல் தொட்டியில் ஒரு பெண் மூழ்கி இறப்பது போன்று கடைசியில் ஒரு காட்சியை வைத்து முடித்துள்ளனர் படக்குழு இதற்கு தற்போது எதிர்ப்புகள் வளர்ந்த வண்ணம் உள்ளது.

இதனால் பிரியா வாரியருக்கு பல இன்னல்களை இப்படம் கொடுத்த வண்ணம் உள்ளது.வளர்ந்து வரும் நடிகைகள் இந்த மாதிரி படங்களில் சிக்கி தவிப்பது தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment