ப்பா மிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்

நடிகர் அஜித் மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து மங்காத்தா 2 படத்தில் நடிக்க உள்ளார்.
சென்னை: நடிகர் அஜித் மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து மங்காத்தா 2 படத்தில் நடிக்க உள்ளார். அஜித்தின் 61வது படமாக இது இருக்கும் என்கிறார்கள்.

நடிகர் அஜித் மற்றும் போனி கபூர் இணை மிகவும் நெருக்கமாகிவிட்டது. நேர்கொண்ட பார்வை படம் ஹிட் ஆனது, அவருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதனால் இன்னும் இரண்டு படங்களில் அஜித் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இதில் ஒரு படம் உறுதியாகி உள்ள நிலையில் இன்னொரு படம் குறித்த ஆலோசனை நடந்து வருகிறது.

நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி வெற்றிகரமாக இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும் இது. அந்த படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு நேர்கொண்ட பார்வை வெளியானது. படமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.

இதனால் இயக்குனர் வினோத் உடன் மீண்டும் படம் எடுத்து வருகிறார் நடிகர் அஜித். கோலிவுட்டில் இருக்கும் மாஸ் இயக்குனர்களை விட இதுபோன்ற வித்தியாசமாக படம் எடுக்கும் இயக்குனர்கள் நன்றாக ஹிட் கொடுக்கிறார்கள். இந்த படத்தில் அஜித் போலீசாக நடிக்கிறார்.

இந்த நிலையில் அஜித்தின் 61வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படம் மங்காத்தா 2 என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மங்காத்தா 1 படம் ஹிட் அடித்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து இரண்டாவது பார்ட் வெளியாக உள்ளது.

இதற்காக வெங்கட் பிரபு இரண்டு நாட்கள் முன்பு அஜித் மற்றும் போனி கபூர் ஆகியோரிடம் கதை சொல்லி இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் கதை பிடித்துவிட்டதாம். இதனால் விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் இது மங்காத்தா முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்குமா, இல்லை வேறு கதையா என்று விவரம் வெளியாகவில்லை. அதேபோல் இந்த படத்தில் இன்னொரு வில்லன் நடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். மிகப்பெரிய ஹீரோ ஒருவர் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Related posts

Leave a Comment