பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட அந்த ஒரு புகைப்படம்.. கிழித்துதொங்கவிட்ட நெட்டிசன்கள்.. அப்படி என்ன போட்டோ தெரியுமா?

பிக்பாஸ் ஜூலிக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முன்வரிசையில் நின்றுகொண்டு சின்னம்மா சின்னம்மா என ஜூலி எழுப்பிய கோசத்தால் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். வீரத்தமிழச்சி என்றும் அவரை சோசியல் மீடியாக்களில் கொண்டாடினார்கள்.

ஜூலி தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்கு போனார். அங்கு அதிகமான பொய்சொல்லி கடும் சர்ச்சையிலும் சிக்கினார். அவர் சொன்ன பொய்களினால் ஜூலியை போலி என சோசியல் மீடியாக்களில் அசிங்கப்படுத்தினார்கள். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பின் ஜூலிக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் வாய்க்கவில்லை.

ஜூலி அடிப்படையில் நர்ஸாக இருந்தவர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தால் கிடைத்த புகழ்வெளிச்சத்தில் அப்படியே லைம்லைட்க்கு வந்தார். இந்நிலையில் உலக செவிலியர்தினமான நேற்று நர்ஸ் உடையில் இருக்கும் தன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் ஜூலி. இதைப்பார்த்த அவரது பாளோவர்ஸ் நீ நர்ஸா? நீ தான் செலிபிரேட்டின்னு பீத்திகிட்டு இருக்கியே..என கமெண்ட் செய்துவருகின்றனர்

Related posts

Leave a Comment