பிக்பாஸ் சீசன் 4-ல் பெருத்த தொகை கொடுத்து பிரபல தமிழ் பட நடிகை வளைத்து போட்ட விஜய் தொலைக்காட்சி !

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் துவங்க முடிவு செய்துள்ளனர்.

பிக் பாஸ் 4 நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா? என்று பேசப்பட்ட நிலையில் ப்ரொமோ வீடியோ வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்தது.

இந்நிலையில், பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல இளம் நடிகைகளுக்கு அழைப்புகள் சென்று கொண்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் சமீப காலமாக இருக்கும் நடிகர்களும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், புகழ், விஜே மணிமேகலை, மற்றும் ஷிவானி ஆகியோர் பெயர் அடிபட்டு வருகிறது.

இந்த நிலையில், இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்களில் நாயகியாக வலம் வந்தவர் ஷில்பா மஞ்சுநாத். பார்ப்பதற்கே கவர்ச்சியாக இருக்கும் இந்த இளம் நடிகையை எப்படியாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வர விஜய் டிவி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.

அதுமட்டுமில்லாமல், அவர் ரூ. 1 கோடி சம்பளம் கொடுத்தால் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறேன், இல்லை என்றால் வேறு ஆளை பாருங்கள் என்று கூறிவிட்டாராம்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் டீம் ஷில்பா மஞ்சுநாத்தை அணுகி ரூ.1 கோடி கொடுத்து அவரை அழைத்ததாகவும் ஷில்பாவும் அதற்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், சமீப காலமாக, ஹாட் போட்டோஸ் மூலம் சமூக வலைதளங்களை சூடேற்றி வரும் நடிகை கிரண், பிக்பாஸ் தமிழ் 4ல் போட்டியாளராக என்ட்ரி கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-க்கான ஷூட்டிங் வெகு விரைவில் துவங்கவுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான முதல் ப்ரோமோவை வெளியிட்டது.

நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த முதல் ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ப்ரோமோ வீடியோவில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

தற்போது, இந்த ரியாலிட்டி ஷோவில் ஷிவானி நாராயணன், அனு மோகன், பூனம் பாஜ்வா, சூர்யா தேவி, சனம் ஷெட்டி, கோபிநாத், ரம்யா பாண்டியன், புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, அம்ரிதா, அதுல்யா ரவி, கிரண், வித்யுலேகா ராமன் ஆகியோர் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.

Related posts

Leave a Comment