பிக்பாஸ் ஒளிபரப்பிய வீடியோவை கண்டு கதறி அழுத சம்யுக்தா, சமாதானம் செய்யும் போட்டியாளர்கள். எதனால் தெரியுமா?

உலகநாயன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

சென்ற வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வேல்முருகன் வெளியேற்ற பட்டார், அதனை தொடர்ந்து பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

மேலும் இந்த வீட்டில் நுழைந்ததில் இருந்த அமைதியாக விளையாடி வருபவர் சம்யுக்தா, இதனால் இவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. இப்பொது சம்யுக்தா பிக்பாஸ் வீட்டின் தலைவராகி இருப்பதால், மற்ற போட்டியாளர்களிடையே தனது குரலை உயர்த்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சம்யுக்தாவின் மகன் ரியான் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவை பிக்பாஸ் டிவி-யில் ஒளிபரப்ப, அதை கண்டு கதறி அழுகிறார் சம்யுக்தா.

Related posts

Leave a Comment