நடிகை பாவனா தமிழில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக அவர் சினிமாவில் பணியாற்றியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கன்னட படத்தயாரிப்பாளரை திருமணம் செய்துகொண்டார். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
அவருக்கு இன்னும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. அண்மையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளின் ஷில்பாவின் சகோதரி ஸ்வேதாவின் திருமண நிச்சயதார்தத்தில் கலந்துகொண்டார்.
அப்போது தன் தோழிகளுடன் மேடையில் பாடலுக்கு நடனமாடும் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை ரம்யா நம்பீசன் பாடகர்கள் விஜய் யேசுதாஸ் சயானோரா ஆகியோடும் கலந்துகொண்டனர்.