பாலாஜிக்காக வக்காளத்து வாங்க போய்…ஷிவானிக்கு செம்ம நோஸ்கட்..?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றுவரை மௌனமாக இருந்த ஷிவானி, முதல்முறையாக ஆவேசமாக பாலாஜிக்காக வக்காளத்து வாங்கிய காரணத்தால்,கேப்ரில்லாவிடம் அசிங்கப்பட்ட காட்சி இன்றைய அடுத்த புரமோவில் உள்ளது.

‘பாட்டி சொல்லை தட்டாதே’ டாஸ்க்கில் தொலைந்த பத்திரம் கிடைக்கிறதோ இல்லையோ, பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே இருக்கும் உறவு பத்திரமாக இருக்காது போலிருக்கின்றது. பத்திரம் குறித்து பாலாஜியிடம் கேப்ரில்லா கேட்டு கொண்டிருக்க, அதற்கு பாலாஜி பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருக்கின்றார்.

அப்போது கேப்ரில்லா, ‘ஹானஸ்ட்டா பதில் சொல்லுன்னு சொன்னேன், நீ சொல்லிட்ட, அதுக்கு அப்புறம் ஒண்ணுமே சொல்லலியே’ என்று கூற அப்போது குறுக்கிட்ட ஷிவானி, ‘எதுக்கு ஹான்ஸ்ட்டா பதில் சொல்லனும் என்று கேள்வி எழுப்ப அதற்கு கேபிரில்லா காட்டமாக, ‘நீ எதுக்கு பேசுற, நான் அவன்கிட்ட பேசுறேன்’ என்று பதிலடி கொடுக்க, அதற்கு ஷிவானி, ‘நீ எதுக்கு இப்ப வாய்ஸ் ரெய்ஸ் பன்ற என்று கேட்க, ஆமா அப்படித்தான் வாய்ஸ் ரெய்ஸ் பண்ணுவேன் என்ன பண்ணுவ இப்ப? என்று அதிரடியாக பதிலளிக்க என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளார் ஷிவானி.ஒரு மாசத்துக்கு பின்னர் ஷிவானியும், கேபிரில்லாவும் தங்கள் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment