பட ரிலீஸ் தேதியுடன் வெளியானது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புதிய ட்ரைலர்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் திரில்லர் படம் தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

மறுவார்த்தை , விசிறி என தர்புக சிவா இசை அமைப்பில் பாடல்கள் ஹிட் வகையறா தான் (அதுவும் பல வருடங்களுக்கு முன்பு ). எனினும் பண பிரச்சனை விவகாரம் தொடங்கி  பல தடைகள்.

அதனை தகர்த்து  படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதா என பல குழப்பங்கள், சர்ச்சைகள் தான் இப்படத்தினை பற்றி.

இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு இப்படத்தின் அப்டேட் என்ற தகவல் இன்று  சமூகவலைத்தளங்களில் வெளியானது. அதே போல் படக்குழு சொல்லிய அதிகாரபூர்வ அறிவிப்பு இது தான்.

படம் செப்டெம்பர் 6 ரிலீசாகிறது. இதோ புதிய ட்ரைலர்.

Related posts

Leave a Comment