நடு ரோட்டில் ஷூட்டிங் – கேரவேன் இல்லை – தமன்னா இப்படி தான் உடை மாற்றினார் – இயக்குனர் பெருமிதம்..!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது, ‘சீட்டிமார்’ என்ற தெலுங்கு படத்தில் கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறார். 

தமிழில், கேடி படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவின் வியாபாரி படத்தில் நடித்தார்.பிறகு, போதிய பட வாய்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு கல்லூரி திரைப்படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

தொடந்து, படிக்காதவன், அயன், பையா ஆகிய படங்கள் தமன்னாவை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாற்றியது. இதில், பையா திரைப்படம் தான்தமன்னாவிற்கு நல்ல ப்ரேக். படம்முழுதும் பயணிக்கு வேடம். ஹீரோயினை சுற்றிய கதை என்பதால் தமன்னாவிற்கு நல்ல திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.இந்த படத்தை இயக்குனர் லிங்கு சாமி இயக்கியிருந்தார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் பை பாஸ் சாலையில் நடப்பது போன்றே அமைக்கப்பட்டிருக்கும். அப்போது தமன்னாவிடம் கேரவேன் கிடையாது.

வேறு இடங்கள் என்றால் ஏதேனும் ரூம் இருக்கும் அங்கு சென்று உடை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், நடு ரோட்டில் எங்கு சென்று உடை மாற்றுவது. அதனால், மூன்று பெண்களை புடவையை விரித்து பிடிக்க சொல்லிவிட்டு, அதற்கு இடையே நின்று தான் உடை மாற்றிக்கொண்டு வந்து நடிப்பார்.

வேறு நடிகைகளாக இருந்தால் இப்படி செய்திருப்பார்களா என்று தெரியவில்லை. இது தான் தமன்னாவின் வளர்ச்சிக்கு காரணம் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் இயக்குனர் லிங்கு.

Related posts

Leave a Comment