தல 60 படத்தின் கதை வெளியானது! யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் இவர் நடிப்பில் இந்த வருடம் விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து இருந்தார். இந்த நேர்கொண்ட பார்வை ஹிந்தி படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானது.

தற்போது தல அஜித் குமார் ஹச் வினோத்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் இந்த படத்திலும் பணியாற்ற உள்ளனர். இந்த திரைப்படத்தை போனி கபூர்த்தான் தயாரிக்கிறார்

மேலும் இந்த திரைப்படம் அஜித்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படம் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தில் அஜித் பைக் ரேஸ் வீரராக நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அஜித் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் துப்பாக்கி சுடுதல் பைக் ரேஸ் என பன்முகத்திறமை கொண்டவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.

மேலும் அவருக்கு பைக் ரேஸ் என்பது எவ்வளவு பிடிக்கும் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம் இந்த திரைப்படம் பைக் ரேஸ் மையப்படுத்தி எடுக்கப்படும் அஜித்தின் வாழ்க்கை வரலாறு படம் என்றே கூறலாம்.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஒருவேளை இது உண்மையாக இருந்தால் அஜித் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

இது பற்றி உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் தெரிவிக்கவும்.

Related posts

Leave a Comment