டேய் என் புருசன் இருக்காரு… பொதுமேடையில் தர்ம சங்கடத்துக்கு ஆளான பிரபல நடிகை..!

தமிழகத்தின் நயன் தாராவுக்கு ரசிகர் இல்லாத தெருவே இல்லை எனச் சொல்லிவிடலாம். அவருக்கு சினிமாவில் வாய்ஸ் கொடுப்பவர் தீபா வெங்கட். சின்னத்திரை, பெரியதிரையில் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார் தீபா வெங்கட்.

ஹலோ எம்.எப் சென்னையில் மூன்றாம் பார்வை என்னும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார் தீபா வெங்கட். இப்போது அவர் வெளியிட்ட வீடீயோ ஒன்றில், ‘’வீட்டில் எனக்கு இரு குட்டி தேவதைகள் இருக்கின்றன. அவர்களோடும், குடும்பத்தோடும் நேரத்தை செலவு செய்யவும், சொந்த காரணங்களுக்காகவும் இந்த நிகழ்ச்சியில் இருந்து கனத்த மனதுடன் வெளியேறுகிறேன்” என அம்மணி வீடீயோ போட, அவரது ரசிக கண்மணிகள் மிகுந்த சோகத்தில் உறைந்து போய் கிடந்தார்கள்.

இப்போது 44 வயதாகும் தீபா வெங்கட் ஐடியில் வேலைசெய்யும் தன் கணவர், இரு குழந்தைகளுடன் அழகாக இப்போது பொழுதுபோக்கிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தோடு கூடுதல்நேரத்தையும் செலவிட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவுக்கு தன் கனவரோடு போய் இருந்தார் நடிகை தீபா வெங்கட். அவரை மேடைக்கு அழைத்த தொகுப்பாளர் திரைப்படத்தில் நயன் தாரா பேசும் ஒருவசனத்தை பேசச் சொன்னார். அப்போது ராஜா ராணி படத்தின் காட்சி ஸ்க்ரீனில் வந்தது.

அதைப் பார்த்ததும் தீபா வெங்கட், ‘தொகுப்பாளரைப் பார்த்து போடா போ உனக்கு யாராவது தேன்மொழி, கனிமொழின்னு வாய்க்கா வரப்புல சுத்திட்டு இருப்ப..அவளைத்தேசி லவ்வு பண்ணுன்னு’ சொன்னார். உடனே தொகுப்பாளர், ‘ எனக்கு அப்பான்னா தாங்க பயம். மத்தபடி லவ் யூ தாங்கன்னு சொன்னார். உடனே தீபா வெங்கட் பதறிப்போய், ‘டேய் என் புருஷன் இருக்கார்’ன்னு சொல்லிச் சிரித்தார். குறித்த அந்த வீடியோ அதிகம் பேரால் பகிரப்பட்டுவருகிறது.

Related posts

Leave a Comment