ஜெயம் ரவியின் தாஸ் பட நடிகை என்ன இப்படி மாறி விட்டார்-ரசிகர்கள் அதிர்ச்சி.

நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த “கலாபக் காதலன்” திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ரேணுகா மேனன் நடித்திருந்தார். தென்னிந்தியத் திரைப்பட நடிகையான இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 

நடிகை ரேணுகா மேனன் நம்மள் என்ற மலையாளத் படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர். பரத் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த பிப்ரவரி 14 திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

நடிகை ரேணுகா மேனன் பிப்ரவரி-14 மற்றும் கலாப காதலன் ஆகிய படங்களில் நடித்து தமிழில் அறியப்பட்ட நடிகையானார், ஆர்யா நடிப்பில் வெளிவந்த கலாபக் காதலன் படத்தின் கரு சகோதரியின் கணவனை விரும்பும் பெண்னை பற்றியது என்பதால் இந்தப்படம் வயதுவந்தோர் பிரிவுக்குள் வைக்கப்பட்டது. 

பெரும்பாலும் நடிகைகள் 30 வயதுக்கு மேலே தான் திருமணம் செய்து கொள்வது வழக்கம். ஆனால் ரேணுகா 19 வயதில் 2006 -ஆம் ஆண்டு சாவ்ப்ட்வேர் இன்ஜினியரான சூரஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை விட்டுட்டு குடும்பம், குழந்தை என வாழ்ந்து வருகின்றனர், திரை உலகில் நல்ல வாய்ப்பு இருக்கும்போதே, திருமணம் செய்து கொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. நடனம் மற்றும் ஓவியம் வரைவதில் திறமை பெற்ற இவர் கலிபோர்னியாவில் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறாராம். இந்நிலையில் தற்போது இவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related posts

Leave a Comment