சொட்டும் வேர்வையை கூட துடைக்க முடியாத நிலையில் நடிகை மீனா..! என்ன தான்ப்பா ஆச்சு நம்ம கவர்ச்சி கன்னிக்கு..?

உலகையே ஆட்டிப் படைத்து வரும் இந்த கொரோனா நோய் தற்போது கொஞ்சம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் கொரோனா நோயால் ஏற்பட்ட lockdown தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் தொடங்கப்பட்டது.

நடிகை மீனா இந்திய தமிழ் திரைப்பட நடிகை 90 காலகட்டத்தில் அனைத்து ரசிகர்களிடமும் தனக்கான ஒரு பெரும் இடத்தை பெற்றவர். அதன் பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை மீனா. இந்நிலையில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் 2 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில்  தொடங்கப்பட்டது.

இதில் நடிகை மீனா நடிக்க உள்ளார். இதன் காரணமாக நடிகை மீனா சென்னையில் இருந்து கேரளாவிற்கு விமானத்தில் பயணம் சென்ற போது தன்னைத்தானே நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஃபுல் கவரான உடையில் சென்றுள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக ஊடகத்தில் பதிவு செய்து மேலும் இந்த உடையை முழுவதும் அணிந்து இருப்பது ரொம்ப கஷ்டம் என்று கூறி எனக்கு வியர்வை வருகின்ற பொழுது கூட என்னால் துடைக்க முடியவில்லை.அதுமட்டுமல்லாமல் விமானத்தில் ஏசி போட்டு இருந்தும் எனக்கு வியர்வை வேர்த்துக் கொட்டி உள்ளது.

இந்த ட்ரஸ் அணிந்து பணிபுரிவது மிகவும் கஷ்டமானது என்பது எனக்கு இப்பொழுது புரிகிறது என்றும் தெரிவித்துள்ளார். அதனால் இந்த உடையை அணிந்து அனைவருக்கும் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் எனது சல்யூட் என்று தனது ட்வீட்டில் ட்விட்  செய்துள்ளார் நடிகை மீனா. மேலும் அனைவரும் கொரோனா நோயிலிருந்து தங்களைத் தாமே பாதுகாத்து கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/CFumwSwhlwJ/?igshid=ev217jlul99p

Related posts

Leave a Comment