சிறுவனிடம் ஏமாந்து போன இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.!

இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு இயக்கி ஹீரோவாக நடிக்கும் “கட்டில்” என படத்தில் இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடிக்கிறார். 
இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகை ஸ்ருஷ்டி ஒரு பேட்டியில் சிறுவனால் ஏமாற்றப்பட்டேன் என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ” கட்டில் படத்தில், எனக்கு மகனாக நடிப்பதற்காக, ஒரு சிறுவனை அழைத்து வந்தனர். அந்த சிறுவன், அத்தனை அழகாக, துருதுருவென இருந்தான். நடிப்பிலும் தாறுமாறு காட்டினான்.

ஆனால், அவனுடன் நடித்த சில நாட்கள் பிறகுதான் அது சிறுவன் அல்ல சிறுமி என்பது எனக்கு தெரிய வந்தது. இயக்குனர், கணேஷ்பாபுவின் மகள் அஞ்சனா தமிழ்ச்செல்வி தான் மகனாக நடிக்கிறார் என்று தெரிந்தது” என்று கன்னக்குழி புன்னகையுடன் கூறுகிறார்.

Related posts

Leave a Comment