சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘ரஜினி 168’ கிராமத்து பின்னணியில் அசத்தலான கதை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. தல அஜீத்தை வைத்து ‘வீரம்’, ‘விஸ்வாசம்’ போன்ற கிராமத்து பின்னணியில் உருவான வெற்றி படங்களை கொடுத்த சிவா, சூப்பர் ஸ்டாரிடமும் அதுபோன்ற கிராமத்து பின்னணியில் நடக்கும் கதையைக் கூறி சம்மதம் வாங்கியுள்ளார் என்றும், அந்த படத்தின் படப்பிடிப்பு சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளில் துவங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தர்மதுரை’, ‘எஜமான்’, ‘முத்து’ போன்ற படங்களில் கிராமத்து இளைஞனாகத் தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு சூப்பர் ஸ்டார் நடித்திருந்தார்.

அந்த படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரமும், அவரது ஸ்டைலும் இன்னும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. மீண்டும் அதுபோன்ற கதாபாத்திரத்தில் அவரை பார்க்க ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இயக்குநர் சிவாவும் கிராமத்து கதை என்றால் ஒரு கை பார்த்துவிடுவார். இந்த கூட்டணியில் படம் அமைவதை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் தற்போது மும்பையில் ‘தர்பார்’ படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிவடைந்ததும் ‘ரஜினி 168’ படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

Related posts

Leave a Comment