சிம்பு த்ரிஷா திருமணத்தை பற்றி வெளிவந்தது அடுத்த அப்டேட்-இந்த ட்விஸ்ட நம்ம எதிர்ப்பார்களையே!!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் கதாபாத்திரங்களாக ஜோடி சேர்ந்த பிரபல நடிகர் சிம்பும் த்ரிஷாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கிட்டத்தட்ட உறுதியான நிலையில் தற்பொழுது த்ரிஷா புதிய குண்டை தூக்கிப்போட்டுள்ளார்.

ரசிகர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விண்ணைத்தாண்டி வருவையா திரைப்படத்தின் ஒரு பாகமாக “கார்த்திக் டயல் செய்தே எண்” என்ற பெயரில் குறும்படம் ஒன்றை சிம்பு த்ரிஷா நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் பல ஆண்டுகள் கழித்து இந்த லாக் டவுனில் வெளியிட்டிருந்தார். பெரும் வரவேற்பை பெற்று வைரல் ஆனா இச்செய்தி சிம்பு த்ரிஷா கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் புரளியை கிளப்பிவிட்டது.

தமிழ் சினிமாவில் மிக பெரிய பிரபலங்களான இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இதற்கு நடிகை த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதைப்பற்றி அவர் கூறுகையில் “எனக்கும் சிம்புவிற்கும் திருமணம் என்பது போலியான ஒன்று நாங்கள் இரண்டு பெரும் நல்ல நண்பர்களே தவிர, எங்களுக்குள் வேற ஏதுமில்லை” என்று கூறி போலியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இருவரும் கல்யாண வயது வந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது ரசிகர்களுக்கு வேதனை கொடுக்கின்றது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. சிம்புவிற்கு அவரது வீட்டில் அவருக்கான ஒரு பொருத்தமான பெண்ணைத் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிம்பு தன் அரசியல் அடிதடி “மாநாடு” திரைப்படத்திலும் த்ரிஷா மணிரத்தனத்தின் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திலும் பிஸியாக இருக்கும் நிலையில் தங்களுக்கு இடையே வெளிவந்த வதந்திகளை தெளிவு படுத்தியது பாராட்டக்கூடியது.

Related posts

Leave a Comment