சித்தப்பு சரவணன் வெளியேறவில்லை! தீயாய் பரவும் தகவல்…

பேருந்தில் பெண்களை உரசியதாக சொன்ன காரணத்திற்காக சரவணன் பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று அதிரடியாக வெளியேற்றப்பட்டார். 

சரவணன் என்ன காரணத்திற்காக வெளியேற்றப்பட்டார்? சக போட்டியாளர்களிடம் பிரியாவிடை பெற கூட சரவணனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சரவணன் எங்கே போனார், என்ன ஆனார் என்ற குழப்பத்தில் இருந்தனர் பார்வையாளர்களும், பிக் பாஸ் குடும்பத்தினரும் உள்ளனர். 

இந்நிலையில் சரவணன் வெளியேறவில்லை என்ற தகவல் ஒன்று தற்போது தீயாய் பரவி வருகின்றது. சிலர் அவர் ரகசிய அறையில் இருப்பதாக கூறி வரும் நிலையில் மற்றொரு தகவல் ஒன்று தீயாய் பரவி வருகின்றது. 

ஆம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சரவணன் வெளியேற்றப்படவில்லை என்றும் வெளியேறியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இதற்கான காரணம் கடந்த வாரம் மனைவிகள், குழந்தையை பார்க்க நினைத்த சரவணனின் ஆசையை நிறைவேற்றுவதற்கு, அவரது குடும்பத்தினரை பிரபல ரிவி சந்தித்த போது அங்கு பெரும் பிரச்சினை நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. 

இந்த பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றுள்ளதால் வேறு வழியின்றி பிரபல ரிவியிடம், அவரது மனைவி தனது கணவரை வெளியே அனுப்பினால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும் என்றும் இல்லாவிட்டால் பிரச்சினை இன்னும் அதிகமாகும் என்று கூறியுள்ளார்களாம். 

இதற்கு உடன்பட்ட பிரபல ரிவி கல்லூரி பருவத்தில் செய்த தவறினை தற்போது கூறியதை சுட்டிக்காட்டி வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படி பல தரப்பட்ட தகவல்கள் வருகிறது, எது நிஜம் என்பது பிக்பாசுக்கே வெளிச்சம்….

Related posts

Leave a Comment