சாய்பல்லவியை முத்த காட்சியில் நடிக்க சொல்லி வற்புறுத்திய இயக்குனர்.! ஒரே ஒரு வார்த்தையைக் கூறி காப்பாற்றிய நடிகர்.!

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர், இவர் தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கவர்ந்தார்.

பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் தியா என்ற திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலம் அடைந்தார், மேலும் இவர் தனுஷின் மாரி 2 திரைப்படத்தில் நடித்து ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை மிரட்டினார்.  இந்தப் பாடல் பல சாதனைகளை நிகழ்த்தியது.

அதன்பிறகு தமிழில் என்ஜிகே, பாவ கதைகள் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் லவ் ஸ்டோரி விராட பருவம் ஆகிய தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இவர் நடிக்க வருவதற்கு முன்பு பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் 2008ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சாய்பல்லவி முத்த காட்சிகளில் இருந்து தப்பித்தது பற்றி காரணத்தை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது ஒரு படத்தின் இயக்குனர் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என வற்புறுத்தினார், ஆனால் நான் அப்படி நடிக்க முடியாது என மறுத்து விட்டேன் ஆனாலும் தொடர்ந்து முத்த காட்சியில் நடிக்க வேண்டுமென நிர்ப்பந்தம் வைத்தார்.

உடனே அந்த திரைப்படத்தின் கதாநாயகன் வந்து மீ டூ இயக்கத்திற்கு கொண்டு சென்றால் என்ன செய்வீர்கள் என இயக்குனர் பார்த்து கேட்டுள்ளார் அதன்பிறகு அந்த இயக்குனர் முத்தக்காட்சியில் நடிக்கும்படி என்னை வற்புறுத்தவில்லை என அந்த பேட்டியில் சாய்பல்லவி கூறியுள்ளார். மீ டூ  தான் என்னை காப்பாற்றியது எனக் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment