சனத்துக்கு வக்காலத்து வாங்கும் பாலாஜி !பத்திரகாளியான அர்ச்சனா! முடிந்தது பாலாஜியின் கதை!

பிக்பாஸ் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு, இந்த சீசன் பயங்கர சண்டையோட ஆரம்பமாகியிருக்கு. ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போகும் போக்கெல்லாம் இல்லை போல, கை வெச்சா குற்றம், கால் பட்டால் குற்றம்னு சொல்லி கோல்மூட்டிகிட்டு இருக்காங்க. எப்பவுமே அரசல் புரசலா தெரிவதை வைத்து ஒருமுடிவுக்கு வந்துவிடக்கூடாது என்பதை, பிக்பாஸ் புரோமோ தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கு புரியும். இன்னைக்கு விவாத மேடை என்ற பெயரில் டாஸ்க் கொடுத்திருக்காங்க. அதில் ஒரு ஹவுஸ் மேட் இன்னொரு ஹவுஸ் மேட் இடையே உள்ள கருத்துவேறுபாட்டை ஒரு சீட்டில் எழுதி பெட்டிக்குள் போட வேண்டும்.

சுசித்ரா நீதிபதியாக இருந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவார். ஆரம்பத்தில் பாலாஜி-சனம் பிரச்சனையாக மட்டுமே பார்க்கப்பட்ட விவாத மேடை, போகப்போக சுரேஷ் சனம் இடையே மோதல் உண்டாகும் அளவுக்கு தீவிரமடைகிறது. ஒரு விசயத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, சனம் உள்ளே புகுந்து திசை திருப்பிவிடுவதாக சுரேஷ் குற்றச்சாட்டை முன் வைக்கிறார். அப்போது பாலாஜி சனத்துக்கு ஆதரவாக நிற்கிறார்.

சுரேஷை பார்த்து நீங்க எப்படி அந்த மாதிரி சொல்லலாம்? அப்படி பேசக்கூடாது என்று சொல்ல, இடையில் புகுந்த ஷிவானி, “இங்க பாருங்க, உங்களுக்கும் சனத்துக்கும் இடையில் இதே போல தான் ஒரு பிரச்சனை நடந்துச்சு, அப்போ ஆரி இடையில் வந்து பேசி தீர்த்து வச்சாரு, அந்த நேரத்தில் உங்களுக்கு கோபம் வந்த மாதிரி தானே சுரேஷ்கும் இருக்கும் என்று சொல்லி டிராக் மாற்றுகிறார். உடனே சுதாரித்துக்கொண்ட அர்ச்சனா இங்க பாருங்க, இப்போ நடப்பது சுரேஷ்-சனம் இடையிலான பிரச்சனை, உங்க ஆர்கியூவ்மெண்ட் அப்புறம் வெச்சுகோங்கன்னு சொல்லி தனியே அழைத்துச் செல்கிறார்.

ஷிவானி, அர்ச்சனா, பாலாஜி என மூன்று பேரும் தனியா நின்று காரசாரமான பேச்சுவாரத்தை நடக்கிறது. நாங்க உனக்கு சப்போர்ட் பண்ண, நீ சனத்துக்கு சப்போர்ட் பண்றா, அப்போ நாங்க என்ன முட்டாளா? எங்கள பார்த்தா ஸ்டுப்பிட் மாதிரி தெரியுதா? என பாலாஜியை பொரித்து தள்ளுகிறார் அர்ச்சனா. தோற்கிறா மாதிரி இருக்கவங்க பக்கம் நின்று ஜெயிக்க வைப்பது தான் கெத்து என்று சொல்லி பாலாஜி ஒரு சிரிப்பு சிரிக்கிறார். அர்ச்சனாவின் செல்லப்பிள்ளையாக பார்க்கப்பட்ட பாலாஜி, இனி வரும் எபிசோடுகளில், வேறு விதமாக திசை திரும்ப கூட வாய்ப்பு இருக்கு.

Related posts

Leave a Comment