“குட்டியான ட்ரவுசர்..” பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள ஜெயம்ரவி பட நடிகை..!

பாலிவுட்டில் “முன்னா மைக்கேல்” என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றவர் இளம் நடிகை நிதி அகர்வால். இவர் தமிழில் ஜெயம் ரவியின் பூமி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

இந்த படம் கொரோனா ஊராடங்கு காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. ஊரடங்கு முடிந்தது படம் வெளியாகும் என கூறுகிறார்கள். பாலிவுட் நடிகைகள் என்றால் கவர்ச்சிக்கு கடுகளவும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், நிதி அகர்வால் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். 

அவரது கவர்ச்சி படத்தை காணவே ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். சமீபத்தில் படுகவர்ச்சி படமொன்றை வெளியிட்டு, அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் நிதி அகர்வாலை கேவலமாக திட்டினார்.

மேலும், நாட்டில் இப்போதெல்லாம் பெண்களுக்கு மரியாதையே இல்லை. வர வர நிலைமை மோசமாகிகிட்டே போகுது. கற்பழிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கவர்ச்சியான படங்களை வெளியிடுவது அவசியம் தானா என்று விளாசினார். 

இதனால் கோபம் அடைந்த நிதி அகர்வால் அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார். இவரின் பேரழிவு சிந்தனையை கண்டு திகைப்பாக உள்ளது. உங்களுடைய முகவரியை எனக்கு அனுப்புங்கள். 

பிங்க் படத்தின் பிரதியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அது உங்களுக்கு தேவைப்படும். கற்பழிப்பு என்பது எல்லா மட்டத்திலும் தவறானது. மற்றவர்கள் செய்யும் தவறுக்காக இன்னமும் பெண்களை குறை சொல்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார் நிதி.

Related posts

Leave a Comment