ஓஹோ இந்த ஒரு காரணத்தினால் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் வெளியேறினாரா ! கிழியும் விஜய் டிவியின் முகத்திரை ! நீங்களே பாருங்க

பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் வெளியேற என்ன காரணம் என்று ரசிகர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

வெளியேற்றத்திற்கு பின்னர் ட்விட்டரில் இந்தியளவில் #SureshChakravarthi ட்ரெண்டாகி வருகிறார்.

இனி எத்தனை பேரு வந்தாலும் இவரை மாதிரி யாரும் வர முடியாது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில், சுரேஷ் சமையலில் செம எக்ஸ்பர்ட். அதனால் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொல்வதற்கு தான் அவரை வெளியில் அனுப்பி இருக்கிறார்கள் என தெரிவிக்கின்றனர்.

மறுபுறம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து மீம்ஸ் போடவும் அவர்கள் தயங்கவில்லை.

ஆளுக்கு ஒரு ஸ்ட்ரேட்டஜி இருக்கு இதுதான் எங்க ஸ்ட்ரேட்டஜி என விஜய் தொலைக்காட்சி தெரிவிப்பது போல மீம் போட்டு கிண்டலடித்து உள்ளனர்.

எது எப்படியோ உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் இனி சுரேஷ் தாத்தா போல யாராலும் கண்டெண்ட் கொடுக்க முடியாது என்பது மட்டும் உண்மை.

மிகவும் வலுவான போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்.

வாக்கெடுப்பின் அடிப்படையில் அர்ச்சனா அல்லது சோம் வீட்டைவிட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல சுரேஷின் வெளியேற்றம் அமைந்து விட்டது.

மறுபுறம் இதை எதிர்பார்த்து காத்திருந்தவர் போல சுரேஷின் நடவடிக்கைகள் இருந்தன. வேகமாக உள்ளே சென்று தன்னுடைய பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

அப்போது இதுக்கு ஒரு காரணம் இருக்கு. விரைவில் அது உங்களுக்கு தெரிய வரும் என்பது போல அவரது பேச்சு இருந்தது.

இதனால் சுரேஷே தன்னை அனுப்புமாறு கோரிக்கை வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இறுதிப்போட்டி வரை முன்னேறுவார் என ரசிகர்கள் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெளியேற்றம் அதிர்ச்சி என்றாலும் கமல் கூறியதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

Related posts

Leave a Comment