“என்ன மீரா அக்கா… பான் பீடா போட்ட மாதிரி வாய் செவந்து போயிருக்கு..” – வாணிபோஜன் வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான வாணி போஜன் தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

சமீபத்தில் ‘ஓ மை கடவுளே’ படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மீரா அக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரை பலரும் செல்லமாக மீரா அக்கா என்று அழைத்து வருகிறார்கள்.

தற்போது கைவசம் 5 படங்களை வைத்துள்ளாராம். இந்நிலையில் இணையத் தொடர்களிலும் நடிக்க முன்வந்துள்ளார் வாணி. முருகதாசிடம் துணை இயக்குநராக உள்ளவர் இயக்கத்தில் இவர் நடிக்கும் இணையத் தொடரின் படப்பிடிப்பு ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு விலக்கப்பட்டதும் இந்தத் தொடர் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறுகிறார்கள். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெறுவார்.

அந்த வகையில், ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் இவர் வீட்டின்மொட்டை மாடியில் இருந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட ரசிகர்களை லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Related posts

Leave a Comment