என்ன சிம்ரன் இதெல்லாம்..! – இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.! – வைராலகும் வீடியோ..!

சமூக வலைதளங்கலான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இதையெல்லாம் தாண்டி தற்போதைய இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்திருப்பது டிக்-டாக் செயலி தான். 

சாமானியர்களை கடந்து பாலிவுட், டோலிவுட், கோலிவுட் திரைப்பிரபலங்களும் டிக்-டாக்கில் இணைந்துள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்கள் பலரும் பொழுது போக்க வழியில்லாததால் டிக்-டாக்கில் இணைந்து டைம் பாஸ் செய்து வருகின்றனர். 

அந்த வகையில், 90’ஸ்களில், நடிகை சிம்ரனின் நடிப்பையும், அவருடைய நடனத்தையும் பார்த்து வியக்காத, ரசிக்காத… ரசிகர்களே இல்லை. விஜய், அஜித், விஜயகாந்த் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கடந்த வருடம் தான் நிறைவேறியது.

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், தலைவர் செம்ம ஸ்டைலிஷாக நடித்திருந்த, ‘பேட்ட’ படத்தில் சிம்ரன் நடித்திருந்தார். மீண்டும் சினிமாவில் ஒரு ரவுன்ட் வர துடியாய் துடித்து கொண்டிருக்கும் சிம்ரன் அடிக்கடி மீடியா வெளிச்சத்தில் படுகிறார்.

சமீபத்தில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இடுப்பை ஆட்டி நடனம் போட்டு நான் இன்னும் சினிமாவுல தான் இருக்கேன் என்று அறிவித்தார். மேலும், இளம் நடிகைகள் பலரும் ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். அதனை தற்போது சிம்ரனும் கையில் எடுத்துள்ளார்.

சமீபத்தில் டிக் டாக் செயலில் இணைந்த சிம்ரன் டிக் டாக் பிரபலங்களுடன் ஆட்டம் போட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஹிட்டான புட்ட பொம்மா பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CAMUlPYBtvY/?utm_source=ig_web_copy_link

Related posts

Leave a Comment