என்னது முகினுக்கு ரெட் கார்டுடா ? சரவணன் போல் வெளியேற்றபோறீங்களா வெளிவரும் உண்மை

என்னது முகினுக்கு ரெட் கார்டுடா ? சரவணன் போல் வெளியேற்றபோறீங்களா வெளிவரும் உண்மை பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகென் சேரை தூக்கிக்கொண்டு அபிராமியை அடிக்கப்பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கன்டென்ட் கிடைக்காமல் தவித்து வந்த பிக்பாஸ் பிக்பாஸ் வீட்டில் சண்டக்கோழியாக சுற்றிவந்து எலிமினேட் ஆன வனிதாவை மீண்டும் அழைத்து வந்தார்.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்துள்ளார் வனிதா. வனிதாவுக்கு அதிருப்தி ஏற்படாத வகையில் ஹவுஸ்மேட்ஸ்கள் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார் பிக்பாஸ்

இதனால் வனிதாவின் மனம் கோணாமல் நடக்கின்றனர் ஹவுஸ்மேட்ஸ்கள். இந்நிலையில் நேற்றே காதல் கத்திரிக்காயெல்லாம் வேண்டாம் என்று அபிராமியிடம் கூறிய வனிதா, இன்றும் அதனை தொடர்ந்தார்.

இதனால் எடுப்பார் கைப்பிள்ளையான அபிராமி, முகென் மீது பழியை போட்டு அவரிடம் பாய்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையிழந்த முகென் அபிராமியை அடிக்க சேரை தூக்குகிறார்.

ஏற்கனவே தான் பேசிக்கொண்டிருக்கும் போதே மீரா எழுந்து சென்றதால் கோபமான முகென் டைனிங் டேபிளை வேகமாக அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து அபிராமியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கட்டிலை அடித்து உடைத்தார்.

இந்நிலையில் இன்று அபிராமியை அடிக்க சேரை தூக்கிவிட்டார் முகென். எப்போதோ நடந்த விஷயத்தை இப்போது கூறி, அதற்கு மன்னிப்பும் கேட்டு விட்டார் சரவணன். ஆனால் பெண்களை இழிவு படுத்திவிட்டதாக அவரை அதிரடியாக வெளியேற்றினார் பிக்பாஸ்.

ஏற்கனவே கட்டில் உடைப்பு குற்றம் முகென் மீது உள்ளது. இந்நிலையில் ஒரு பெண்ணை அடிக்க சேரை தூக்கியுள்ளார் முகென். என்ன கோவம் வந்தாலும் உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை அடிக்கப் பாய்வதெல்லாம் ஓவரோ ஓவர். இதனை காரணமாக வைத்து முகெனை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுவாரா பிக்பாஸ்.

Related posts

Leave a Comment